Saturday, October 31, 2009

அதிவேக இணையம் உங்கள் கையில்........


இன்று அநேகமானவர்களின் வீடுகளில் இணைய வசதியானது சர்வசாதரணமான ஒரு தேவையுடைய ஒன்றாக பரிணாமம் எடுத்துள்ளது. அதே போல் இச் சேவையினை வழங்கும் சேவை வழங்குனர் மத்தியிலும் பல் தர பட்ட விதமான அளவீடுகள் முறைமைகளில் தமது சந்தாதாரர்களை கவரும் விதத்தில் சேவை வழங்கப்பட்ட வண்ணம் தான் இருந்து கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் இணைய வசதி கம்பி ( Cable ) மூலம் வழங்கப்பட்ட போதும் தற்பொழுது நவீன முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வலையமைப்புகள் மூலமாக இணைய வசதியினை வழங்குமளவிற்கு தகவல் தொழிநுட்பம் வளர்ந்து  நிற்கிறது.
இதன் ஒரு பகுதியாக தான் HSDPA ( High Speed Down Link Packet Access ) என்ற இணைய வசதியினை எங்கும் எடுத்து செல்லும் வசதியை வழங்குவதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் பரந்தளவிலான அதிவேக இணய வசதியனை செல்லும் இடமெல்லாம் எடுத்து செல்ல கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட USB சாதனமே இந்த HSDPA ஆகும்.


ஒப்பீட்டளவில் கம்பி மற்றும் பரந்தளவிலான இணைய சேவையினை விட இதன் வேகம் அதிகமானதாகவே காணப்படுகிறது. இதன் மூலம் சுமார் 3 .6 Mbps - 7 .2 Mbps இடையே வரையிலான தரவிறக்கம் மற்றும் தரவேற்ற வேகத்தினை வழங்கும் திறன் கொண்டது. இருந்த போதும் சேவை வழங்குனர்களின் வரையறைக்கேற்ப இதன் தரவிறக்க தரவேற்றம் காணப்படும்.
இலங்கையை பொறுத்தவரை இச்சேவையினை முதற் தர சேவை வழங்குனர்களான Mobitel மற்றும் Dialog நிறுவனங்கள் சந்தாதாரர்களின் வசதிக்கேற்ப தெரிவு செய்து கொள்ள கூடிய வகையில் பொதி முறைமைகளை அறிமுகம் செய்து வழங்கி வருகிறார்கள். ஏற்கனவே கூறியது போல் இணையத்தில் வேகம் காணப்படுகின்ற போதும் இதன் சேவையானது 3G (3rd Generation ) வலையமைப்பு உள்ள இடங்களிலேயே பெறக்கூடியதென்பது சந்தாதாரர்களுக்கு எமாற்றத்தை தரும் விடயமாகவே காணப்படுகிறது.
HSDPA ஒன்றின் விலை இலங்கை நாணய பெறுமதிப்படி சுமார் 6000 தொடக்கம் 17000 வரையில் காணப்படுகிறது. விலை வித்தியாசம் செயற்த்திரங்களுக்கேற்ப வேறுபடுகின்ற அதே வேலை அநேகமான தருணங்களில் சேவை வழங்குனர்களே தமது இணைப்புடன் இதையும் வழங்குகிறார்கள். சேவை வழங்குனர்கள் தமது சேவையினை மாத்திரம் பயன்படுத்த கூடிய வகையில் வடிவமைத்தே இதனை சந்தையில் விநியோகம் செய்துவருகின்ற போதும்  ஏனைய சேவை வழங்குனர்களின்   இணைய வசதியினை இணைப்பதற்கேற்ற முறையில் இதனை சீர் செய்து கொள்ள முடியும். 
நீங்கள் அடிக்கடி பிரயாணம் செய்பவராக இருந்தால் வித்தியாசமான அடுத்த தலைமுறையினருக்கான  அதிவேக இணைய வசதியினை அனுபவிக்க நீங்கள் தகுதியுடையவர். 
உங்களில் எவறும் இந்த HSDPA பாவனையாளராக இருந்தால் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாமே......


Monday, October 26, 2009

காதலில் எத்தனை விதம்...........????

ஒரு சில நாட்கள் எழுதாமல் விட்டால் அதுவே பழக்கமாய் போய் முதுகில் ஏறி இருந்து எதுக்குயா இதலாம் நமக்கிருக்க வேலையில இதலாம் தேவையான்னு ஒரு கேள்வி வேற அதுக்கு பக்க வாத்தியமா நம்ம மனசு வேற அதானேன்னு இருந்தாலும் நாங்கலாம் அப்படி இருந்திட மாட்டம்ல....... 

சரி சரி மொக்கைய போடாம மேட்டருக்கு வாயா எண்டு சொல்றிங்களா? இன்றைய நமது வாழ்வில் எத்தனையோ மாற்றங்கள் வந்துகொண்டு தான் இருக்கிறது அது தகவல் தொழினுட்பமாக  இருந்தாலும் சரி கிரிக்கெட்டின் T20 யாக இருந்தாலும் சரி எல்லாம் காலத்தின் தேவையால் மாற்றமடைந்து கொண்டு தான் இருக்கிறது மாற்றமடையவும் செய்யும் .

ஆனால் இதெல்லாம் இப்படியிருக்க நம் காதல் மட்டும் எப்படியிருக்கிறது என்று ஒரு மொக்கை பதிவிடலாமே என்று தோன்றியது.இன்று நமக்கு தெரிந்த எத்தனை விதமான காதல் இருக்கிறதென்பதை பார்க்கலாம்.உங்களுக்கு தெரிந்தாலும் பின்னூடமும் இடலாம்.

உலகையே ஆட்டிவைக்கும் இந்த காதல் தாரக மந்திரம் எப்படியெல்லாம் வருகிறது என்பது ஒரு ஆச்சரியம் தான், காரணம் நம்மை போன்றவர்களுக்கும் வருவதால் தான்.( ஹையோ ஹையோ )

 பள்ளிகூட காதல்-இது என்னவோ பருவ வயதில் பள்ளிக்கூடத்தில் இருக்கும் பருவ வயதினருக்கு ( பள்ளி கூடத்தில படிகிறவன் பருவ வயசுகாரன் தானேயா???) வந்துவிடுகிறது. ஆனால் இதற்க்கென்னவோ அந்தளவாக வரவேற்பு இருப்பதில்லை காரணம் சிறு பிள்ளை விளையாட்டு என்பதாலோ என்னவோ??? நான் அறிந்து காதலித்த என் பாடசாலை நண்பர் எவறும் அதை தொடர்ந்ததாக தெரியவில்லை. வாழ்க சமுதாயம்....!!!பார்த்ததும் காதல்- இவர் தான் ஓரளவு பிரபல்யாமான நபர் அநேகமான பசங்களுக்கும் பார்த்ததுமே பத்திகிறது இது தான்.நமக்கு கூட சிம்ரன்,த்ரிஷா,மற்றும் நமிதாவ பாத்தப்ப கூட வந்திச்சு.இத வச்சு தான் இன்று வரைக்கும் தமிழ் சினிமா ஓடுறது  ஒடிக்கிட்டிருக்கு, ஓடட்டுமே உங்க பொழைப்புல நாங்க மன்ன அள்ளி போட விரும்பலப்பா.... ஆனா கொஞ்சம் எங்களுக்கும் சொல்லி தந்தா நல்லா இருக்குமே.......!பழகிய பின் காதல்-இது என்னவோ ஓரளவு வெற்றியளித்து கொண்டு தான் இருக்கிறது காரணம் பார்த்ததும் பத்திக்கிரதை விட இது ஓரளவு புரிந்துணர்வின் பின்னர் வருவதாலோ என்னவோ. இருந்தாலும் இந்த காதலை சொல்ல போய் தன் நண்பியை இழந்த நண்பர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.இப்ப நாம காலடி எடுத்து வைக்க போறது லேட்டஸ்ட் டெக்னாலஜி காதல்கள்.
அது என்ன அப்படி காதல்னு நினைக்காதிங்க எல்லாம் நமக்கு பழக்கமான காதல் தான்,அதான் SMS Chat Email FB இப்படி இருக்க காதல், இன்னொரு காதலும் இருக்கு missed call காதல்இது சற்று வித்தியாசமான காதல்.

இதில் என்ன பெரிய கொடுமைஎன்றால் சிலர் பார்காமலே காதலிக்கிறார்கள் என்னப்பா நீங்க என்ன காதல் கோட்டை அஜித்தும் தேவயானியுமா என்ன? Wrong no காதல் ஒரு வித்தியாசமான காதல் தெரியாத ஒரு நம்பரை அழைத்து அதில் பெண் குரல் கேட்டால் தொடர்ந்து அழைத்து பேசினால் கடலை போடும் ஒரு வகை காதல். பாத்துப்பா இப்பெல்லாம் எல்லா recorded voice எல்லாம் பெண்கள் தான் அது புரியாம அவவ காதலிச்சு தொலச்சிட  போறீங்க.


இந்த chat அதாவது இணையம் மூலமான காதல் எப்படி வருகிறது எப்படி தொத்திகிறது என்றே புரிய மாட்டேங்குது கண்டம் கடந்து காதல் வருகிறது ஆனால் ஒரு doubttu பா நம்ம விஜய் டிவி லொள்ளு சபால சொல்ற மாதிரி சொன்னா அண்ணே எனக்கொரு doubttu இந்த இனைய காதல் எல்லாம் இணையுதா?


சில கடற்க்கரை காதல்களும் உண்டையா.............!!!!

இப்படி எத்தனயோ விதமான காதல் இருந்துக்கிட்டு தான் இருக்கு எனக்கு ஏதோ கொஞ்சம் தெரியும் உங்களுக்கு தெரிஞ்சாலும் சொல்லுங்கப்பா கொஞ்சம் பொது அறிவ வளத்துக்கலாம்................  

Thursday, October 8, 2009

மன்னனுக்கு ஒரு மகுடம்....!!!

கமல் ஹாசன்....! இவரின் நாமம் அறியாத தமிழன் இருத்தல் அறிதே என்றுதான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு புகழின் உச்சியை சினிமாவில் சாதித்ததன் மூலம் மக்களின் மனதையும் வெற்றி கொண்டவர்.களத்தூர் கண்ணம்மாவில் அனைத்து உள்ளங்களையும் கொள்ளை கொண்ட அந்த பச்சிளம் பாலகன் இன்றுவரை அதே இடத்தில் இருப்பதென்பது சாதாரணமான ஒரு விடயம் இல்லை என்பது யாவரும் நன்கறிந்ததே.

களத்தூர் கண்ணம்மாவில் என்னவோ நேற்று தான் பார்த்தது போல் இருந்தது ஆனால் இவர் சினிமாவிற்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டதாம் என்பதையே தனியார் தொலைக்காட்சியொன்று இவரை கௌரவ படுத்தும் விதத்தில் ஒழுங்கு செய்திருந்த அனைத்து இந்திய நச்சத்திரங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தெரிந்தது.இந்த நிகழ்வில் இசைஞானி இளைய ராஜா,சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ( பெயர கேட்டாலே சும்மா அதிருதில்ல) ஆஸ்கார் புயல் எ.ஆர்.ரஹ்மான்,மம்முட்டி,சிரஞ்சீவி,மோகன் லால் போன்ற நச்சத்திர அந்தஸ்து நாயகர்கள் மேடையை அலங்கரித்தது இவர் மேல் வைத்திருக்கும் கெளரவம் மற்றும் அவருக்கு கொடுத்த மரியாதையை காண்பித்தது.

கமல் ஹாசனின் திரை உலக பயணத்திற்கு களத்தூர் கண்ணம்மா வித்திட்டிருந்தாலும் அவரிற்கு  கதா நாயகன் அந்தஸ்தை அவ்வளவு இலகுவாக பெற்று கொடுத்திருக்க வில்லை.ஆண்களின் அழகிற்கு இலக்கணம் கூறுமளவில் இருந்த கமழும் சினிமாவில் சற்று முயன்றே தான் முன்னாள் வந்தவர்.இவரின் முயற்சிகள் இவரை ஒரு நடிகன் என்பதையும் தாண்டி இயக்குனர்,பாடகர்,நடன இயக்குனர் என்று பல பரிணாமங்களை தொட்டிருக்கிறது.எதையும் வித்தியாசமாய் செய்ய வேண்டும் என்ற எண்ணமே இவரின் வெற்றிக்கு விருந்தாய் இருந்தது.அதே தருணம் இவர் கமல் என்பதால் எல்லாம் வெற்றியில் மட்டும்  முடியவில்லை சில தோல்விகள் சோதனைகளும் கூட இருந்தன அவைகளை கண்டு அவர் ஒரு போதும் ஓடியதாகவோ இல்லை ஒதுங்கியதாகவோ தெரியவில்லை.தான் ஒரு நச்சத்திர அந்தஸ்தை எட்டியிருந்த போதும் அவரின் தேடலிலும் புதிய பல முயற்சிகளை முயற்சித்து பார்ப்பதிலும் அவர் என்றும் பின் நின்றதில்லை.தன் சிறுவயதிலேயே பாரிய பல கதாபாத்திரங்களை முயன்றவர் இன்றைய தன் 50 வருட சினிமாவிலும் வித்தியாசமான கதா பாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதற்கேற்றால் போல் தன்னை ஒழுங்கமைத்து வழங்குவதென்பது அவ்வளவு இலகுவானதல்ல என்பது யாவரும் அறிந்த ஒன்றே.


நிச்சயமாய் இன் நிகழ்வு தொலைகாட்சியில் ஒளிபரப்பானதும் பல பதிவர்கள் வித்தியாசமான சிந்தனை கருத்துக்களோடு உங்களை சந்திபர் என்று எண்ணுகிறேன்.

   


இந்நிகழ்வை  ஒழுங்கு செய்திருந்த இந்திய தொலைக்காட்சிகளின் புதிய பல நிகழ்ச்சிகளை தமிழர்களுக்கு அறிமுகம் செய்துவைத்த பெருமைக்குரிய விஜய் டிவி இன் நிகழ்வினை எதிர்வரும் 12 ,13 ஆம் திகதி மக்களுக்காக ஒளிபரப்பு செய்ய விருக்கிறார்கள்.அதில் நிச்சயமாக யார் யார் என்ன என்ன சொல்லி இவரை பாராட்டினார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம் அதற்க்கு முன்னர் சில நிகழ்வின் நிழல்கள் உங்களுக்காக.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நிகழ்வில் ஆச்சியை காணக்கிடைகவில்லையே என்னவா இருக்குமோ ?????


ஏதோ நம்மளால முடிந்தது............. நாராயணா நாராயணா..............!!!

Wednesday, October 7, 2009

Facebook vs Twitter யாரின் அலுவலகம் சிறந்தது..............!!!

இன்றைய தகவல் தொழினுட்பத்தின் வளர்ச்சி சற்றும் எண்ணிப்பார்க்க முடியாதளவிற்கு உலகை வியாபித்திருக்கிறது.ஆரம்பத்தில் கணினி,வலையமைப்பு,மின்னஞ்சல் என்பதே ஏதோ மனித  சிந்தனைக்கு எட்டாத ஒன்றாகவே காணப்பட்டது பார்க்கப்பட்டது.காலப்போக்கில் பழக்கப்பட்ட மனிதன் இன்று பல சமூக வலையமைப்புகள் மூலம் தமது பள்ளிக்கூட,பல்கலைக்கழக,அலுவலக நண்பர்களோடு தொடர்பில் இருக்கிறார்கள்.இத்தகைய சமூக வலைப்பின்னல் சேவையினை பலதரப்பட்ட போட்டி நிறுவனங்கள் வழங்கி வருகின்ற போதும் முன்னிலையில் என்னவோ Twitter,Facebook ஆகியனவே பெரும்பாலனவர்களால் உலகளவில் உபயோகிக்கப்பட்டும் அறியப்பட்டும் இருக்கிறது.தமது சந்தாதாரர்களுக்கு இவர்களோ இலவசமாக சேவையினை வழங்குவது மாத்திரமன்றி தமது வலையமைப்பை தொடர்ந்து முன்னிலையில் வைத்திருக்க கண்டிப்பாக பெறும் பாடு படுகிறார்கள்.

இது இவ்வாறு இருக்க சில அலுவலகங்களில் இத்தகைய சமூக வலைத்தளங்களை பாவிப்பதை தடைசெய்து வைக்கிறார்கள் காரணம் தமது ஊழியர்கள் இதற்கு அடிமையாகி இருப்பதால்.


இத்தகைய சேவையினை வழங்குவதற்காக இரவு பகலாய் இவர்கள் உழைக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.இவ்வாறான சந்தர்பங்களில் இவர்களின் அலுவலக சுற்றுப்புற சூழல் இவர்களின் மனநிலையினை எப்பொழுதும் ஆரோக்கியமானதாகவும் புதிய பல சிந்தனைகளை எண்ணங்களை தோற்றுவிக்க கூடிய நிலையிலும் பேணிப்பாதுகாக்க கூடிய நிலையிலும் இருத்தல் இன்றியமையாத ஒன்றாகவே இருக்கிறது.

இதை உணர்ந்து கொள்ளும் இவர்களின் முகாமைத்துவம் எந்த வகையில் இவர்களின் அலுவலகங்களை இவர்களுக்குரிய முறையில் வடிவமைத்து கொடுத்திருக்கிறது என்பதனை நாம் இப்பொழுது பார்க்கலாம்.  
Facebook வலையமைப்பின்அலுவலக தோற்றம் 


 
 
 
 
 
 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 

Twitter வலையமைப்பின் அலுவலக தோற்றம் 

 

 


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அவ்வளவு தாங்க எரிச்சலா இருந்தா தாரளமா உங்க எரிச்சல்கள் எல்லாம் பின்னூட்டமா இடலாம்.முடிஞ்சா உங்க Boss ஐ கூட இங்க கூட்டி வந்து காட்டுங்க பாருயா நீயும் வச்சிருக்கே ஒரு ஆபீஸ்.......! அப்படினு