எப்படி அம்மா உன்னால் முடிகிறது ?????
சுமக்கிராயே என்னை 10 மாதம் கழிந்தும்,
கங்காரு போல் சுமக்கிராயே என்னை......!!!
ஒரு கணம் நான் எண்ணியதில்லை
நீ இல்லா உலகில் நான் எப்படியென்று...!!!
கோழைத்தனம் உன் பிரிவை கற்பனை பண்ணி பார்க்க கூட அனுமதித்ததில்லை
கடவுளுக்கு என் மேல் அலாதி பிரியமோ உன்னை என் தாயாக்கி விட்டான்
நான் எத்தனை முறை பிறந்தாலும் உன் பிள்ளையாய் பிறந்திட வேண்டும்
பிழை பொறுக்கும் உன் குணத்தில் ஒரு பாதி இருந்தாலே நான் மகான் அல்லவா
அகிலமே அழிந்தாலும் நீ ஒன்று போதும் எனக்கு
நீ மறைந்தால் மறையுமே என் அதிஷ்டம் என்னை விடுத்து
இத்தனை நாள் சென்றாலும் இன்றும் நான் உன் செல்லபிள்ளை
ஈன்றெடுத்த முதல் நாளில் எப்படி நீ பார்த்தாயோ
அப்படியே பார்கிறாயே இன்று வரை ஒரு குறையின்றி
அகராதி புரட்டிப்பார்த்தேன் அர்த்தமான வார்த்தைக்காக
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
அன்னை என்ற சொல்லிற்கே அகராதி நீ தான் என்று
நான் சேர்த்து செல்வங்கள் கரைந்துவிடும் நொடிப்பொளுதுதனில்
கரையாத ஒரு செல்வம் என்றும் என் அன்னை நீயே அம்மா............!!!!
No comments:
Post a Comment