Saturday, October 3, 2009

ப்ருனியின் அரசர் சுல்தானின் சுகபோக வாழ்கை.......

 உலகப்பக்காரகள் வரிசையில் முதலில் உள்ளவர்கள் எந்தளவு தங்கள் வாழ்க்கையில அவைகளை அனுபவிப்பார்களோ தெரியவில்லை ஆனால் இன்றைய பதிவில் பார்கபோகும் இந்த நபர் அனுபவிக்கிராரா இல்லையா என்பதை நீங்களே பாருங்கள்.


 ப்ரூனியின் அரசர் சுல்தான் பணக்காரர் என்ற பெயரை நீண்ட காலமாக தன்னகத்தே கொண்டுள்ளார்.அவ்வாறு எந்தளவு இவர் பணம் பெருகிவருகிறது என்பதை பார்க்கலாம்.
இவரின் வருமானம் ஒரு செக்கனுக்கு 90 Euroகலால் அதிகரித்துக்கொண்டு இருக்கிறதாம்.( அப்படி என்னப்பா செய்றிங்க எங்களுக்கும் கொஞ்சம் சொல்லலாமே) இதன் படி ஒரு நிமிடத்தில் இவரின் வருமானம் 5400 Euroகலால் அதிகரிக்கிறது இதுவே ஒரு மணித்தியாலத்தில் 324000 Euroகலால் அதிகரித்து ஒரு நாளைய வருமானத்தினை 7776000 euro வை தொடவைக்கிறது.( அட பாவாமே ஒரு நாளைக்காயா இவளவு? எனக்கு ஒரு நிமிடத்துல வாராத மட்டும் குடுத்துடங்கப்பா) நீங்கல்லாம் கணக்குல புலி தானே ( புலி என்டைக்கையா கணக்கு பாத்திச்சு?) ஆகையால இனி வாரத்திற்கு மாதத்திற்கு வருசத்திற்குனு பாத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொறாம பட்டுகொங்க என்ன?(இத தானே நாம காலம் காலமா செய்றம்)



                                                                                

சுல்தான் அரசர்

இவ்வளவு செல்வம் இருப்பவர் என்ன நம் போல் சும்மாவா செலவழிப்பார் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செலவழிப்பார்.இதை உண்மையாக்கும் விதமாக இவர் சாப்பிடும் உணவுக்கரன்டியை கூட தங்கத்திலானதாக உபயோகிக்கிறாராம்.கரண்டியே தங்கம் என்றால் இவரின் உடைகள் என்ன சாதாரணமாகவா இருக்கும் கண்டிப்பாக இல்லை இவரின் உடைகள் எல்லாம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தங்கத்தினால் அலங்காரம் செய்யப்பட்டிருக்குமாம்.

இதுவே இப்படியென்றால் இவரின் அரண்மனையோ 1788 அறைகளை கொண்டு அமைந்துள்ளாதாம்.இங்கே இருக்கும் 257 குளியலறையில் வேலைப்பாடுகள் தங்கம் மற்றும் வெள்ளி கொண்டு செய்யப்பட்டுள்ளதாம்.அது மாத்திரமன்றி இவரிடம் இருக்கும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு 110 வாகன தரிப்பிடங்கள் உள்ளனவாம்.





                                                                               

                                                                                



சுல்தானின் அரண்மனை


இவரிடம் சொந்தமாக விமானமே இருக்கிறது இந்த விமானம் கூட எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது.இந்த விமானத்தின் விலையோ 100 மில்லியன் டாலர் அதை விட இவர் இதற்க்கு செய்த அலங்காரங்கள் எல்லாம் சேர்த்து இதன் விலை 220 மில்லியன் டாலர்.இது மாத்திரமன்றி இவரிடம் சிறிய ரக 6 விமானங்களும் 2 உலங்கு வானூர்திகளும் (ஹெலிகாப்டர்) உள்ளது.




 

 

 

 

 
                                                            








சுல்தானின் விமானமும் அதன் உள்ள புற தோற்றமும்


இவரின் விசேட வேண்டுகோளுக்கிணங்க ரோல்ஸ் றோய்ஸ் நிறுவனம் போர்ச் நிறுவனத்துடன் சேர்ந்து இவருக்காகவே பிரத்தியேகமான ஒரு காரை வடிவமைத்து கொடுத்திருக்கிறது.



 

                                                                                     
இவரின் மகளின் திருமண கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக 14 நாட்கள் நடைபெற்றன.இதற்காக 5 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது.இன் நிகழ்வில் 25 நாட்டு தலைவர்கள் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களோடு பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.




 

 

                                                                              
இதன் போது இளவரசி அணிந்திருந்த கிரீடம் முற்று முழுதாக வைரங்களால் செய்யப்பட்டிருந்தது.அது மாத்திரமன்றி அவர் வைத்திருந்த பூங்கொத்து,அவரின் காதணிகள் எல்லாம் வைரத்திலையே இருந்தன.







8 comments:

  1. images are not visible!!!!!!

    ReplyDelete
  2. are you sure bcoz it visible in my computer let me check any how thanx for your feed back

    ReplyDelete
  3. பணத்தின் மேல் தீராத காதலும், கோபமும் ஒரு சேரக் கிளப்புகிற பதிவு.

    ReplyDelete
  4. r.selvakkumar-பணத்தின் மேல் தீராத காதலும்,

    இருந்த ஒரு வாய்ப்பும் தவறி விட்டது அதான்யா அவரோட மகளும் கல்யாணம் பண்ணிடான்ரன்

    ReplyDelete
  5. Change the heading, the country name is brunei Darusssalm . check the spelling mistake.

    ReplyDelete
  6. Kutti -Change the heading

    முயற்சித்தேன் நண்பரே இதுவே சிறந்த உச்சரிப்பை தருகிறது.தங்கள் வரவிற்கும் பின்னூடத்திற்கும் நன்றிகள்

    ReplyDelete
  7. PANUM PATHUM SEYYUM, INGEY PATHINONRUM SEIGIRATHU. ITHUVE ORU UTHARANAM- SULTAN(A)THOOYAVAN.NAGORE

    ReplyDelete
  8. Anonymous-PANUM PATHUM SEYYUM,
    இவைகள் நமக்கு தெரிந்த விடயங்கள் தெரியாமல் இன்னும் என்னென்ன இருக்கிறதோ

    தங்கள் வரவிற்கும் பின்னூடத்திற்கும் நன்றிகள்

    ReplyDelete