Monday, October 5, 2009

திருமணத்தையும் வித்தியாசமாக செய்பவர் கமல்...........!

எதையும் வித்தியாசமாக செய்து பார்க்க வேண்டும் என்பது தான் டாக்டர் கமல் ஹாசனின் விருப்பம் அது நிழலாக இருந்தாலும் சரி நிஜமாக இருந்தாலும் சரி.இவ்வாறு ஒரு முயற்சி அல்லது முறைமையை கமல் ஹாசன் தனது திருமணத்திலும் செய்து கொள்ள விரும்பினார்.திருமணம் என்பதென்னவோ 1000 காலத்து பயிர் என்பதிலெல்லாம் இவருக்கு துளியளவும் நம்பிக்கையில்லை.ஹாலிவுட் நச்சத்திரம் போல் தன்னை காட்டிக்கொள்ள எத்தனித்தவர் அவரது வாழ்கையையும் அதே பாதையில் தேர்ந்தெடுத்ததென்னவோ சரியான ஒன்றா என்பதை எவராலும் ஆணித்தரமாய் கூறமுடியவில்லை.



அண்மையில் டாக்டர் கமல் ஹாசன் தனது திருமணம் சம்பந்தாமாக தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி.குடும்பங்கள் சக்தி வாய்ந்தவை இருந்தாலும் திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன எனவே திருமணங்கள் தேவையில்லை என்ற கருத்தை பதிவு செய்திருந்தார்.இதே கருத்தை வேறு யாராவது சினிமா சம்பந்த பட்டவர்கள் பதிவு செய்திருந்தால் ஒரு வேலை பூகம்பம் கிளம்பினாலும் கிளம்பியிருக்கலாம்.டாக்டர் கமல் ஹாசன் வாணி கணபதி,சரிகா ஆகியவர்களை திருமணம் செய்திருந்தார்.அதன் போது அவர் கூறினார் எனக்கு பிடித்தவர்களின் ஆசையை நிறைவேற்ற நான் செய்த முட்டாள் தனமான செயல்தான் திருமணம் என்று.அத்தோடு நான் விரும்பிய பெண்ணோடு இருக்க நான் கொடுத்த விலையும் தான் இந்த திருமணம்.(இப்ப புரியுதாய்யா ஏன் உங்க திருமணம் தோல்வியில முடிஞ்சுதுன்னு?)


மனைவி  வாணி கணபதியுடன்  




தொடர்ந்து குறுக்கிட்ட நிருபரோ அப்படியானால் ஏன் இரண்டு பிள்ளைகள் பெற்ற பின்னரும் சரிகாவை மணம்முடித்தீர்கள் என்று வினவினார்.பதிலத்த டாக்டர் கமல் ஹாசன் ஹோட்டேல்களில் இடம் எடுத்து தங்குவதில் ஏற்பட்ட சிரமங்களை தவிர்பதற்கே சரிகாவை திருமணம் செய்து கொண்டேன் என்றார்.(நல்ல காரணமையா முடிஞ்சா எங்களுக்கும் கொஞ்சம் சொல்லி குடுங்க குருவே)


 சரிகா


திருமணத்தில் நம்பிக்கையில்லாதவர் தன் மகளை என்ன செய்ய போகிறாரோ தெரியவில்லை.......பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

2 comments:

  1. சுய நலத்தில் ஏதோ பேத்தி இருக்கிறார் எப்போதும் போல். வரிந்து கட்டிக்கொண்டு வருவார்களே மாதர் சங்கம் என்று ஒன்று அது எங்கே போனது இந்த மடையனின் உளரலை கேட்ட பின்பும்.

    ReplyDelete
  2. Shabeer-சுய நலத்தில் ஏதோ........

    இதை விட ஒரு கொடுமை, என் நண்பர் ஒருவர் இதற்கும் பரிந்து பேசியது தான்.....ரசிகர்களாய் இருக்கலாம் அதற்காக தவறுகளை கூட சரியென்று வாதிடுவதா?

    தங்கள் வரவிற்கும் பின்நூட்டத்திற்கும் நன்றிகள்

    ReplyDelete