Tuesday, October 6, 2009

பதிபவனுக்கே ஒரு பதிவு..............!!!

பதிவில் எழுத ஆரம்பித்து சொற்ப காலமே ஆனதால் சில தொழிநுட்ப சிக்கல்கள் மற்றும் பதிவை மெருகூட்டும் செயற்பாடுகளை அவ்வப்போது முயற்சித்து பார்ப்பதுண்டு கணினியில் நான் கற்றுக்கொண்ட ஓரளவு அறிவு ஏதோ என் அன்றாட வேலைகளை சிரமமில்லாமல் செய்துகொள்ள உதவுகிறது. இருந்தாலும் பதிவுகளை பதிவிடுவதில் நாம் தாங்கி வரும் பதிவின் கருத்தம்சம் எந்தளவு முக்கியம் பெறுகிறதோ அதேயளவு பதிவுகளின் தோற்றம் அதில் காணப்படும் சில தகவல்கள் நம் விருந்தாளிகளை கவருகிறது என்பதனை நான் நண்பர்களின் பதிவுகளுக்கு செல்லும் போது உணர்ந்து கொண்டேன்.

இருந்த போதும் அத்தகைய மனங்கவர் தொழிநுட்ப அம்சங்களை எப்படி என்பதிவில் இணைத்துக்கொல்வதென்பது எனக்கு அவ்வளவு இலகுவாக புரியவில்லை.இருந்த போதும் சிறுதுசிறிதாக முயற்சித்து என்னால் முடிந்தளவு என் பதிவுப்பக்கதை மெருகேற்றிக்கொண்டிருக்கிறேன். நான் பதிவிற்கு புதியவன் என்பதையோ அல்லது என்பதிவில் விருந்தாளிகளின் எண்ணிகையை அதிகரித்து கொள்ள வேண்டும் என்றெண்ணிய சக பதிவர் தமிழினி என் பதிவிலும் விருந்தாளிகள் இலகுவாக என் முன்னைய பதிவுகளை அடையாளம் கண்டுகொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு வலைத்தொடர்பை எனக்கு அனுப்பி வைத்தார். முயற்சித்து பார்த்த எனக்கும் அதில் வெற்றி கிடைத்தது, அதனால் நானும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.நன்றிகள் தமிழினி 

தொடர்ந்து என் பதிவுப்பக்கத்தின் முகப்பு பக்கத்தை மனதைகவரும் வகையில் மாற்றியமைக்க எண்ணிய நான் அதற்குரிய முயற்சியில் இறங்கினேன்.என் முயற்ச்சிக்கு பலனாக மேலும் ஒரு வெற்றி கிடைத்தது இருந்த போதும் இன்றுவரை என் பதிவிற்கு வருகை தந்திருந்த பல் நாட்டு விருந்தாளிகளின் எண்ணிக்கையை கணக்கிடும் விருந்தாளி கணக்கெடுப்பான் துரதிஷ்ட வசமாக என் பதிவுப்பக்கத்தில் இருந்து மறைந்து சென்றது. இதை மீண்டும் எப்படி நிறுவுவது என்பதிலேயே என் முழுக்கவனமும் அவாவும் வியாபித்திருந்தது.

முடியுமான அளவு அனைத்து வலைப்பக்கங்களிற்கும் சென்று அதை மீண்டும் எப்படியாவது நிறுவிவிட வேண்டும் என்று தேடிய போது என்னால் என் முன்னைய விருந்தாளி கணக்கெடுப்பானை  கண்டுபிடிக்கமுடிந்தது எதையோ சாதித்த மனதோடு அதை என் பதிவிலும் நிறுவி முடித்தேன் பின்னர் தான் புரிந்தது நான் நிறுவிய கணக்கெடுப்பான் தன் பணியை புதிய ஆரம்பத்தில் இருந்து மீண்டும் செய்யப்போகிறான் என்று.இங்கு நான் எமாற்றமடைந்தவானாய் இனி மேலும் ஏதாவது மாற்றங்கள் செய்வதாயின் மிக கவனத்துடன் செய்ய வேண்டும் என்பதை என்னுள் திணித்துக்கொண்டேன்.


புதிய பல பதிவர்களே இந்த பதிவு நம் எல்லோருக்கும் ஒரு பதிவாய் இருக்கட்டும்......

2 comments:

  1. //பணியை புதிய ஆரம்பத்தில் இருந்து மீண்டும் செய்யப்போகிறான் என்று.இங்கு நான் எமாற்றமடைந்தவானாய் இனி மேலும் ஏதாவது மாற்றங்கள் செய்வதாயின் மிக கவனத்துடன் செய்ய வேண்டும் என்பதை என்னுள் திணித்துக்கொண்டேன்//

    இது ஒன்றும் பிரச்சனை இல்லை..நீங்கள் இது வரை எத்தனை பேர் வந்து இருந்தார்கள் என்பதை நினைவில் வைத்து இருந்தால் அதை அல்லது குத்து மதிப்பாக கூட வைத்து இருந்தால் இதை நிறுவும் போது அந்த எண்ணிக்கையை கொடுக்கலாம், இதன் மூலம் பழைய கணக்கு விட்டு போகாது.

    http://www.histats.com தளம் போன்றவை எளிதாக இருக்கும்

    ReplyDelete
  2. தற்பொழுது ஏதோ ஒருவகையில் சில தான் இயங்கி கணக்கெடுப்பாங்களை நிறுவியிருக்கிறேன் அவை சிறப்பாக செயல்படுகிறது.தாங்கள் அனுப்பிய வலைத்தொடர்பும் பயனுள்ளதாய்தான் இருக்கிறது சந்தர்பம் வரும் போது தேவை பட்டால் நிறுவுகிறேன்.தங்கள் பின்னூட்டத்திற்கும் உதவி செய்ய என்னியாய மனதிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete