ஒரு சில நாட்கள் எழுதாமல் விட்டால் அதுவே பழக்கமாய் போய் முதுகில் ஏறி இருந்து எதுக்குயா இதலாம் நமக்கிருக்க வேலையில இதலாம் தேவையான்னு ஒரு கேள்வி வேற அதுக்கு பக்க வாத்தியமா நம்ம மனசு வேற அதானேன்னு இருந்தாலும் நாங்கலாம் அப்படி இருந்திட மாட்டம்ல.......
சரி சரி மொக்கைய போடாம மேட்டருக்கு வாயா எண்டு சொல்றிங்களா? இன்றைய நமது வாழ்வில் எத்தனையோ மாற்றங்கள் வந்துகொண்டு தான் இருக்கிறது அது தகவல் தொழினுட்பமாக இருந்தாலும் சரி கிரிக்கெட்டின் T20 யாக இருந்தாலும் சரி எல்லாம் காலத்தின் தேவையால் மாற்றமடைந்து கொண்டு தான் இருக்கிறது மாற்றமடையவும் செய்யும் .
ஆனால் இதெல்லாம் இப்படியிருக்க நம் காதல் மட்டும் எப்படியிருக்கிறது என்று ஒரு மொக்கை பதிவிடலாமே என்று தோன்றியது.இன்று நமக்கு தெரிந்த எத்தனை விதமான காதல் இருக்கிறதென்பதை பார்க்கலாம்.உங்களுக்கு தெரிந்தாலும் பின்னூடமும் இடலாம்.
உலகையே ஆட்டிவைக்கும் இந்த காதல் தாரக மந்திரம் எப்படியெல்லாம் வருகிறது என்பது ஒரு ஆச்சரியம் தான், காரணம் நம்மை போன்றவர்களுக்கும் வருவதால் தான்.( ஹையோ ஹையோ )
பள்ளிகூட காதல்-இது என்னவோ பருவ வயதில் பள்ளிக்கூடத்தில் இருக்கும் பருவ வயதினருக்கு ( பள்ளி கூடத்தில படிகிறவன் பருவ வயசுகாரன் தானேயா???) வந்துவிடுகிறது. ஆனால் இதற்க்கென்னவோ அந்தளவாக வரவேற்பு இருப்பதில்லை காரணம் சிறு பிள்ளை விளையாட்டு என்பதாலோ என்னவோ??? நான் அறிந்து காதலித்த என் பாடசாலை நண்பர் எவறும் அதை தொடர்ந்ததாக தெரியவில்லை. வாழ்க சமுதாயம்....!!!
பார்த்ததும் காதல்- இவர் தான் ஓரளவு பிரபல்யாமான நபர் அநேகமான பசங்களுக்கும் பார்த்ததுமே பத்திகிறது இது தான்.நமக்கு கூட சிம்ரன்,த்ரிஷா,மற்றும் நமிதாவ பாத்தப்ப கூட வந்திச்சு.இத வச்சு தான் இன்று வரைக்கும் தமிழ் சினிமா ஓடுறது ஒடிக்கிட்டிருக்கு, ஓடட்டுமே உங்க பொழைப்புல நாங்க மன்ன அள்ளி போட விரும்பலப்பா.... ஆனா கொஞ்சம் எங்களுக்கும் சொல்லி தந்தா நல்லா இருக்குமே.......!
பழகிய பின் காதல்-இது என்னவோ ஓரளவு வெற்றியளித்து கொண்டு தான் இருக்கிறது காரணம் பார்த்ததும் பத்திக்கிரதை விட இது ஓரளவு புரிந்துணர்வின் பின்னர் வருவதாலோ என்னவோ. இருந்தாலும் இந்த காதலை சொல்ல போய் தன் நண்பியை இழந்த நண்பர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.
இப்ப நாம காலடி எடுத்து வைக்க போறது லேட்டஸ்ட் டெக்னாலஜி காதல்கள்.
அது என்ன அப்படி காதல்னு நினைக்காதிங்க எல்லாம் நமக்கு பழக்கமான காதல் தான்,அதான் SMS Chat Email FB இப்படி இருக்க காதல், இன்னொரு காதலும் இருக்கு missed call காதல்இது சற்று வித்தியாசமான காதல்.
இதில் என்ன பெரிய கொடுமைஎன்றால் சிலர் பார்காமலே காதலிக்கிறார்கள் என்னப்பா நீங்க என்ன காதல் கோட்டை அஜித்தும் தேவயானியுமா என்ன? Wrong no காதல் ஒரு வித்தியாசமான காதல் தெரியாத ஒரு நம்பரை அழைத்து அதில் பெண் குரல் கேட்டால் தொடர்ந்து அழைத்து பேசினால் கடலை போடும் ஒரு வகை காதல். பாத்துப்பா இப்பெல்லாம் எல்லா recorded voice எல்லாம் பெண்கள் தான் அது புரியாம அவவ காதலிச்சு தொலச்சிட போறீங்க.
இந்த chat அதாவது இணையம் மூலமான காதல் எப்படி வருகிறது எப்படி தொத்திகிறது என்றே புரிய மாட்டேங்குது கண்டம் கடந்து காதல் வருகிறது ஆனால் ஒரு doubttu பா நம்ம விஜய் டிவி லொள்ளு சபால சொல்ற மாதிரி சொன்னா அண்ணே எனக்கொரு doubttu இந்த இனைய காதல் எல்லாம் இணையுதா?
சில கடற்க்கரை காதல்களும் உண்டையா.............!!!!
இப்படி எத்தனயோ விதமான காதல் இருந்துக்கிட்டு தான் இருக்கு எனக்கு ஏதோ கொஞ்சம் தெரியும் உங்களுக்கு தெரிஞ்சாலும் சொல்லுங்கப்பா கொஞ்சம் பொது அறிவ வளத்துக்கலாம்................
No comments:
Post a Comment