Thursday, October 8, 2009

மன்னனுக்கு ஒரு மகுடம்....!!!

கமல் ஹாசன்....! இவரின் நாமம் அறியாத தமிழன் இருத்தல் அறிதே என்றுதான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு புகழின் உச்சியை சினிமாவில் சாதித்ததன் மூலம் மக்களின் மனதையும் வெற்றி கொண்டவர்.களத்தூர் கண்ணம்மாவில் அனைத்து உள்ளங்களையும் கொள்ளை கொண்ட அந்த பச்சிளம் பாலகன் இன்றுவரை அதே இடத்தில் இருப்பதென்பது சாதாரணமான ஒரு விடயம் இல்லை என்பது யாவரும் நன்கறிந்ததே.

களத்தூர் கண்ணம்மாவில் என்னவோ நேற்று தான் பார்த்தது போல் இருந்தது ஆனால் இவர் சினிமாவிற்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டதாம் என்பதையே தனியார் தொலைக்காட்சியொன்று இவரை கௌரவ படுத்தும் விதத்தில் ஒழுங்கு செய்திருந்த அனைத்து இந்திய நச்சத்திரங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தெரிந்தது.இந்த நிகழ்வில் இசைஞானி இளைய ராஜா,சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ( பெயர கேட்டாலே சும்மா அதிருதில்ல) ஆஸ்கார் புயல் எ.ஆர்.ரஹ்மான்,மம்முட்டி,சிரஞ்சீவி,மோகன் லால் போன்ற நச்சத்திர அந்தஸ்து நாயகர்கள் மேடையை அலங்கரித்தது இவர் மேல் வைத்திருக்கும் கெளரவம் மற்றும் அவருக்கு கொடுத்த மரியாதையை காண்பித்தது.

கமல் ஹாசனின் திரை உலக பயணத்திற்கு களத்தூர் கண்ணம்மா வித்திட்டிருந்தாலும் அவரிற்கு  கதா நாயகன் அந்தஸ்தை அவ்வளவு இலகுவாக பெற்று கொடுத்திருக்க வில்லை.ஆண்களின் அழகிற்கு இலக்கணம் கூறுமளவில் இருந்த கமழும் சினிமாவில் சற்று முயன்றே தான் முன்னாள் வந்தவர்.இவரின் முயற்சிகள் இவரை ஒரு நடிகன் என்பதையும் தாண்டி இயக்குனர்,பாடகர்,நடன இயக்குனர் என்று பல பரிணாமங்களை தொட்டிருக்கிறது.எதையும் வித்தியாசமாய் செய்ய வேண்டும் என்ற எண்ணமே இவரின் வெற்றிக்கு விருந்தாய் இருந்தது.அதே தருணம் இவர் கமல் என்பதால் எல்லாம் வெற்றியில் மட்டும்  முடியவில்லை சில தோல்விகள் சோதனைகளும் கூட இருந்தன அவைகளை கண்டு அவர் ஒரு போதும் ஓடியதாகவோ இல்லை ஒதுங்கியதாகவோ தெரியவில்லை.தான் ஒரு நச்சத்திர அந்தஸ்தை எட்டியிருந்த போதும் அவரின் தேடலிலும் புதிய பல முயற்சிகளை முயற்சித்து பார்ப்பதிலும் அவர் என்றும் பின் நின்றதில்லை.தன் சிறுவயதிலேயே பாரிய பல கதாபாத்திரங்களை முயன்றவர் இன்றைய தன் 50 வருட சினிமாவிலும் வித்தியாசமான கதா பாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதற்கேற்றால் போல் தன்னை ஒழுங்கமைத்து வழங்குவதென்பது அவ்வளவு இலகுவானதல்ல என்பது யாவரும் அறிந்த ஒன்றே.


நிச்சயமாய் இன் நிகழ்வு தொலைகாட்சியில் ஒளிபரப்பானதும் பல பதிவர்கள் வித்தியாசமான சிந்தனை கருத்துக்களோடு உங்களை சந்திபர் என்று எண்ணுகிறேன்.

   


இந்நிகழ்வை  ஒழுங்கு செய்திருந்த இந்திய தொலைக்காட்சிகளின் புதிய பல நிகழ்ச்சிகளை தமிழர்களுக்கு அறிமுகம் செய்துவைத்த பெருமைக்குரிய விஜய் டிவி இன் நிகழ்வினை எதிர்வரும் 12 ,13 ஆம் திகதி மக்களுக்காக ஒளிபரப்பு செய்ய விருக்கிறார்கள்.அதில் நிச்சயமாக யார் யார் என்ன என்ன சொல்லி இவரை பாராட்டினார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம் அதற்க்கு முன்னர் சில நிகழ்வின் நிழல்கள் உங்களுக்காக.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நிகழ்வில் ஆச்சியை காணக்கிடைகவில்லையே என்னவா இருக்குமோ ?????


ஏதோ நம்மளால முடிந்தது............. நாராயணா நாராயணா..............!!!

No comments:

Post a Comment