Saturday, October 31, 2009

அதிவேக இணையம் உங்கள் கையில்........


இன்று அநேகமானவர்களின் வீடுகளில் இணைய வசதியானது சர்வசாதரணமான ஒரு தேவையுடைய ஒன்றாக பரிணாமம் எடுத்துள்ளது. அதே போல் இச் சேவையினை வழங்கும் சேவை வழங்குனர் மத்தியிலும் பல் தர பட்ட விதமான அளவீடுகள் முறைமைகளில் தமது சந்தாதாரர்களை கவரும் விதத்தில் சேவை வழங்கப்பட்ட வண்ணம் தான் இருந்து கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் இணைய வசதி கம்பி ( Cable ) மூலம் வழங்கப்பட்ட போதும் தற்பொழுது நவீன முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வலையமைப்புகள் மூலமாக இணைய வசதியினை வழங்குமளவிற்கு தகவல் தொழிநுட்பம் வளர்ந்து  நிற்கிறது.
இதன் ஒரு பகுதியாக தான் HSDPA ( High Speed Down Link Packet Access ) என்ற இணைய வசதியினை எங்கும் எடுத்து செல்லும் வசதியை வழங்குவதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் பரந்தளவிலான அதிவேக இணய வசதியனை செல்லும் இடமெல்லாம் எடுத்து செல்ல கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட USB சாதனமே இந்த HSDPA ஆகும்.


ஒப்பீட்டளவில் கம்பி மற்றும் பரந்தளவிலான இணைய சேவையினை விட இதன் வேகம் அதிகமானதாகவே காணப்படுகிறது. இதன் மூலம் சுமார் 3 .6 Mbps - 7 .2 Mbps இடையே வரையிலான தரவிறக்கம் மற்றும் தரவேற்ற வேகத்தினை வழங்கும் திறன் கொண்டது. இருந்த போதும் சேவை வழங்குனர்களின் வரையறைக்கேற்ப இதன் தரவிறக்க தரவேற்றம் காணப்படும்.
இலங்கையை பொறுத்தவரை இச்சேவையினை முதற் தர சேவை வழங்குனர்களான Mobitel மற்றும் Dialog நிறுவனங்கள் சந்தாதாரர்களின் வசதிக்கேற்ப தெரிவு செய்து கொள்ள கூடிய வகையில் பொதி முறைமைகளை அறிமுகம் செய்து வழங்கி வருகிறார்கள். ஏற்கனவே கூறியது போல் இணையத்தில் வேகம் காணப்படுகின்ற போதும் இதன் சேவையானது 3G (3rd Generation ) வலையமைப்பு உள்ள இடங்களிலேயே பெறக்கூடியதென்பது சந்தாதாரர்களுக்கு எமாற்றத்தை தரும் விடயமாகவே காணப்படுகிறது.
HSDPA ஒன்றின் விலை இலங்கை நாணய பெறுமதிப்படி சுமார் 6000 தொடக்கம் 17000 வரையில் காணப்படுகிறது. விலை வித்தியாசம் செயற்த்திரங்களுக்கேற்ப வேறுபடுகின்ற அதே வேலை அநேகமான தருணங்களில் சேவை வழங்குனர்களே தமது இணைப்புடன் இதையும் வழங்குகிறார்கள். சேவை வழங்குனர்கள் தமது சேவையினை மாத்திரம் பயன்படுத்த கூடிய வகையில் வடிவமைத்தே இதனை சந்தையில் விநியோகம் செய்துவருகின்ற போதும்  ஏனைய சேவை வழங்குனர்களின்   இணைய வசதியினை இணைப்பதற்கேற்ற முறையில் இதனை சீர் செய்து கொள்ள முடியும். 
நீங்கள் அடிக்கடி பிரயாணம் செய்பவராக இருந்தால் வித்தியாசமான அடுத்த தலைமுறையினருக்கான  அதிவேக இணைய வசதியினை அனுபவிக்க நீங்கள் தகுதியுடையவர். 
உங்களில் எவறும் இந்த HSDPA பாவனையாளராக இருந்தால் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாமே......


No comments:

Post a Comment