Wednesday, September 30, 2009

இலச்சனை சொல்லும் செய்திகள்

வலைப்பதிவர்களுக்கு சில நேரம் சுவாரஸ்யமான சில தலைப்புக்கள் நிகழ்வுகளை பதிவதற்கு சந்தர்பம் கிடைத்துவிடும் அந்த வகையில் நிச்சயமாக இது ஒரு சுவாரஸ்யமான மற்றும் தெரிந்திருக்காத ஒரு விடயமாகவும் இருக்கலாம்.

இன்றைய எனது பதிவின் பக்கத்தை அலங்கரிக்க வருபவை இலட்சனை சம்பந்தமான விடயம்.ஒரு பொருலோ அல்லது சேவையோ அதன் தரத்தில் மட்டும் தங்கி நிற்பதில்லை,மாறாக அதனுடன் நேரடியாக தொடர்பு படாத சில விடயங்களிலும் தங்கியுள்ளது.இவ்வாறன ஒரு விடயம் தான் அந்த பொருளிற்கான அல்லது சேவைக்கான இலட்சனை. ஒரு இலட்சனை ஒன்றை வடிவமைக்கும் போது அந்நிறுவனம் கண்டிப்பாக தங்கள் பொருட்கள் சேவையின் தன்மையினை வெளிப்படுத்தும் விதமாக பெரும்பாலும் வடிவமைத்து இருப்பார்கள்.

இதே போன்று நாம் ஏற்கனவே அறிந்திருந்த சில இலட்சனைகளும்
அதில் அறிந்திராத விடயங்களையும் சற்று பார்க்கலாம்.

Body Wisdom



பெரும்பாலனவர்களுக்கு இப்படியொரு இலட்சனை இருப்பதே இன்று தான் தெரிந்திருக்கும்.இந்த இலட்சனயினை வடிவமைக்கும் போது வடிவமைப்பாளர் வழங்கப்படவிருக்கும் சேவையினை தத்ரூபமாக இதில் வெளிக்கொண்டுவந்திருப்பார்.Spa சேவையினை வழங்குவதற்காக வடிவமைக்கப்படிருக்கும் இவ் இலச்சனையில் இருகைகள் அமைதியான முறையில் Massage (உடல்களை பிடித்து விடுதல்) சேவையினை வழங்கும் விதத்திலும், உற்று நோக்கும் போது ஆந்தை ஒன்றின் கண் உருவிலும் காணப்படும் இது விவேகக்தையும் குறிக்கும் விதமாய் இருக்கிறது.

Big Ten



மீண்டுமொரு அறிந்திராத இலட்சனையாய் இருக்கும் இது தம்மிடம் ௧௧கல்லோரிஅக்ல் இருக்கிற போதும் இலட்சனையை மாற்ற விரும்பாத காரணத்தினால் மறைமுகமாக 11 என்ற இலக்கத்தினை தன் இலட்சனையிலையே கொண்டுள்ளது.

 






ED



 

மேலோட்டமாய் பார்க்கும் போது அவ்வளவு இலகுவாக விளங்கி கொள்ளா விட்டாலும் உற்று நோக்கும் போது தம் வியாபர பெயரையே மிக மதிநுட்பமாக வடிவமைத்திருக்கிறார்கள்.ED என்பதன் அர்த்தமோ “Elettro Domestici -Home Appliances” என்பதேயாகும்.காலம் காலமாய் இருந்துவந்த இலட்சனை அமைக்கும் முறைமையையே இது மாற்றி அமைத்துவிட்டதாக கூட கருதலாம்.இரண்டு எழுத்துக்களிலும் எதிர்மாறான நிறங்களை பிரயோகித்தது மாத்திரமன்றி பார்ப்பதற்கு இலத்திரனியல் உபகரணங்களின் Plug போன்ற வடிவில் இதை வடிவமைத்திருப்பது அனைவரையும் கவர்ந்த ஒரு விடயமாக காணப்படுகிறது.

Elle Hive
 



உழவு இயந்திரத்தை (Tractor) உற்பத்தி செய்யும் இவ் நிறுவனத்தாரின் இலட்சனையோ அவர்களின் உழவு இயந்திர வடிவமைப்பை போன்ற தோற்றத்தையே பிரதி பலிக்கும் விதமாக
E மற்றும் H ஆகிய ஆங்கில எழுத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

 











Marriage



என்ன ஒரு சிறப்பான கற்பனையின் வெளிப்பாடு இந்த இலட்சனை.இரு மனங்களும் ஒரு மனம் போல் ஒழிவு மறைவின்றி ஒன்றோடு ஒன்றாய் இருக்கவேண்டும் என்பதை எதார்த்த பூர்வமாக கண்ணாடியில் தோன்றுவதை போல் உருவாக்கி இருக்கிறார் இதை வடிவமைத்தவர்.அதே போல் R என்ற பதம் நடுவினில் (நாங்கள்) வரும் விதமாய் அருமையான முறையில் வடிவமைக்கப்பட்ட ஒரு இலட்சனை.

 



!N3K8




இந்த சிக்கல் மிகுந்த இலட்சனையின் வடிவே ஒரு தனி அழகு.ஐரோப்பாவை தளமாக கொண்டியங்கும் IT சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்கும் இன் நிறுவனம் தனது இலட்சனையினை எண்கள் மற்றும் எழுத்துகளை கொண்டு வடிவமைத்துதன் நுண்ணிய வேலைப்பாட்டை எடுத்தியம்ப எத்தனிக்கிறது.

 



Review
 



இந்த இலச்சனையில் V என்ற ஒரு தனி எழுத்தே இவைகள் முற்றுமுழுதாய் பரிசோதிக்கபட்டுவிட்டன என்ற படத்தினையே காண்பிக்கிறது.

 








Pakuay
 



பொதியிடல் சம்பந்தமான சேவையினை வழங்கும் இக் கம்பனி P என்ற எழுத்தில் ஒரு பெட்டி உடைந்து விழுவதை போன்ற ஒரு உருவத்தை தனது இலச்சனையில் காட்டியுள்ளது.

 








Zip




 

இதில் I என்ற எழுத்தோ zip போன்ற ஒரு வடிவமைப்பால் Z மற்றும் ஆகிட எழுத்துகளுக்கிடையே பொறிக்கப்பட்டுள்ளது.

 







Mo Sleep
 



தூக்கமின்மை சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்கும் ஒரு வைத்தியரின் இலச்சனையில் ஒரு கட்டிலும் அதனுடன் M என்ற எழுத்தும் வரும் விதமாக இதை வடிவமைத்துள்ளார்.

இதை உண்மையிலேயே ஒரு சிறந்த உருவாக்கும் திறன் என்றே கருதலாம்.ஒரு சாதரணமான படச்சுருள் பார்ப்பதற்கு இருசூழ்ந்த ஒரு சுற்றுப்புற தோற்றத்தை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதே இதன் சிறப்பம்சமாகும்.