Monday, September 28, 2009

என் பார்வையில் காதல், அழகு, பணம், கடவுள்

எந்த ஒரு அழைப்பும் இதுவரை எனக்கு வரவில்லை பதிபவன் பதுங்கிஇருப்பதில் பயன் இல்லை.
என் பதிவுப்பயணம் ஆரம்பித்து சில காலம் தான் முன்னரை விட இப்பொழுது கொஞ்சம் ஆர்வம் அதிகறித்திருக்கிறது ஆனால் வாசிப்பு பழக்கமும் எழுத்து பழக்கமும் புழக்கத்தில் ( நீயெல்லாம் ஒரு தமிழன் தூ என்றெல்லாம் சொல்ல கூடாது அப்புறம் அலுதுடவன்)  இல்லாமல் போனதால் எழுத்துகளில் சில நேரம் பிழைகள் சந்தேகங்கள் ( இதுல எந்த ர னா வரும் எந்த ழ னா வரும்னு) பிழைபொறுக்கவும்  முடிந்தால் சுட்டி காட்டுங்கள் அடுத்த பதிவில் திருத்தி கொள்கிறேன்)

ஒவ்வொருவர் பார்வையில் ஒவ்வொருவிதம் காதல் காதலுக்காய் காத்திருக்கும் ஆண்களில் அதை பாத்திருக்கும் ஆண்களே அதிகம்.காதலுக்கு பெருமையெல்லாம் முதல் காதலே தோல்விதானாம்.என்னவோ இருக்கிறது இந்த காதலில் இல்லையேல் எப்படி சாத்தியம் நேற்று பைத்தியகாரனாய் திறிந்தவன் இன்று பார்பதற்கே அழகாய்...! நேற்று பார்பதற்கே அழகாய் திறிந்தவன் இன்று பைத்தியகாரனாய்.இரண்டுமே இந்த காதலால்.

காதல் வேறு காமம் வேறு கடைசியில் என்னவோ .........தான் ஜெயிக்கிறது.



காதலுக்காகவும் சாகாதே காதலிக்காமலும் சாகாதே இது காதலின் காந்த தன்மையை தான் சொல்கிறதோ......???

அழகு காதலோடு சம்பந்தப்பட்ட ஒரு சொல். எனக்கு அழகாய் தெரிந்தவள் என் அம்மாவிற்கு அப்படி தெரியவில்லையாம்.நிரந்தரமற்ற ஒரு நடைமுறைச்சொத்து (இங்கயுமா?) ஆண்களை கவர்வதில் அழகிற்கு தான் முதலிடம்.பெண்களுக்கு பிடித்ததில் அழகிற்கு தான் முதலிடம்.அழகானவர்கலெல்லாம்  காதலிக்கிறார்கள் அவரவர் கண்களுக்கு அழகாய் தெரிவதை.உன் அழகை பார்த்து உன்னை காதலித்தேன் உன் தங்கையை காணாதவரை..........!!!
ரசிக்கும் வரை ஆபத்தில்லை................ 





பணம் பரபறப்பாய் பறக்கிறோம் பாழாய்ப்போன பணத்திற்காக.பணமென்று சொன்ன போது பிணம்கூட வாய் பிழக்கும்.பணம் இன்றி நீ இருந்தால் யாரறிவார் உன் நிழலை? பணம் கொண்டு நீ வாழ்ந்தாள் நீ மறப்பாய் உன் உறவை.பந்த பாசம் தேவையில்லை பணம் படைத்த பாவி உனக்கு பந்தம் ஒன்றே போதுமென்பான் நாய் பிழைப்பு பிழைக்குமவன்.பார்ப்பவர் கண்ணில் அவன் பணக்காரன் அவன் தான்அறிவான் தன் நிலை பாரன்.ஜாதி மதம் பார்ப்பவனும் அதையெல்லாம் புறம்தள்ளி நேற்று நீ எங்கிருந்தாய் என்ற கேள்வி கேட்பதேஇல்லை  



கடவுள் இன்றுவரை நீ கண்டதில்லை இருந்தாலும் உனக்குள் ஒரு நம்பிக்கை.பல பேர்க்கும் பல கடவுள், பக்தி என்று வந்துவிட்டால் எல்லோர்க்கும் ஒரு கடவுள்.தோல்வி என்று வந்துவிட்டாள் கடவுளாவது மண்ணாங்கட்டியாவது,தேவை என்று வந்து விட்டால் கடவுளே நீ தான் என்பது.என்று கேட்டார் இதை தா என்று நீயோ சொல்வாய் அதை தா நான் இதை தருகிறேன் என்று.பேரம் பேசும் ஈனப்பிளைப்பும் கடவுளிடம் காட்டிவிடுகிறாய் மானிடா........
உனக்காக அவனா அவனுக்காக நீயா ????



ஏற்கனவே சொன்னது போல் அழைப்புகள் வரவில்லை அந்தளவுக்கு நான் பதிவிற்கு பழையவன் இல்லை.நன்றிகள் திரு.லோஷன் அண்ணா உங்கள் சங்கிலியோடு இதுவும் செல்லட்டுமே.........

யாரையும் அழைக்கவில்லை அந்தளவிற்கு எவரையும் எனக்கு பழக்கமில்லை.இந்த பதிவு ஆரம்பிக்கட்டுமே புதிய பல பதிவர்களை............

7 comments:

  1. செந்தழல் ரவி-good post.....
    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்

    ReplyDelete
  2. ////காதல் வேறு காமம் வேறு கடைசியில் என்னவோ .........தான் ஜெயிக்கிறது.////

    மிகச்சரியே……..

    ReplyDelete
  3. மருதமூரான்-மிகச்சரியே……..

    கடைசியில் உண்மை தானே நண்பா ஜெயிக்கும்....வரவிற்கும் பின்னூடத்திற்கும் நன்றிகள்

    ReplyDelete
  4. ம்.. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  5. Subankan-ம்.. அருமையாகச்.....
    தங்கள் வரவிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் நண்பரே

    ReplyDelete
  6. மணிவண்ணன்October 4, 2009 at 12:19 PM

    அருமையாக இருக்கிறது நண்பா,, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மணிவண்ணன்-அருமையாக இருக்கிறது

    தங்கள் வாழ்த்துக்கள் மேலும் புத்துணர்ச்சியை தருகிறது simple ஆ சொல்ல போனா ஒரு Qtr அடிச்ச மாதிரி ஹா ஹா ஹா நன்றிகள் மணி அண்ணா

    ReplyDelete