Thursday, September 24, 2009

அடித்தால் அடிப்பேன்........! நயன்............!!!

அடித்தால் அடிப்பேன்........! என்னடா இது ICC champions trophy பத்தி எதுவும் என்று ஜோசிக்காதிங்க இது அது இல்ல ஆனா அத விட இப்ப லேட்டஸ்ட் ஹாட் நியூஸ் இது தான் கோடம்பாக்கத்தில். ஏதோ சந்திரசேகரன் படக்கதை போல் இருக்கா? இனியும் பொறுமை இருக்குமா உங்களுக்கு?


சரி வந்த விசயத்த பாக்கலாம் ( அடுத்தவன் குடும்ப பிரச்சனைய அலசுரனா அதுல இருக்க சுகம் அப்பா......!!!) பெயர சொன்னாலே இப்ப ஏறப்போகுது கிக்கு அதாங்க இப்போதைய கிசு கிசுனா அது இண்டைக்கு பிறந்த பிள்ளையும் சொல்லும் அது நயன்தாரா பிரபு தேவா தான்னு. ஏற்கனவே இவங்களுக்குள்ள கிசு கிசு கச முச எல்லாம் பழைய கதையா போச்சு இப்போதைய லேட்டஸ்ட் செய்தி பிரபு தேவாவின் உத்தியோக பூர்வ மனைவி ( அப்ப நயன் அப்படி இல்லனா கேக்குறிங்க?? கடவுள்ளுக்கு தான்பா வெளிச்சம் ஆனா ஒன்டு, மலிஞ்சா சந்தைக்கு வந்து தானே ஆகணும்) ரம்லத் நயனக்கு சொன்னது தான்.அண்மையில் பிரபு தேவாவும் நயனும் ஹிந்தி படம் சம்பந்தமாக செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளனர். இதை அறிந்த ( அட பாவமே நீங்க அறியனும்னு தானே இத அவங்க ஏற்பாடு செய்திருக்காங்க) ரம்லத் தன் பங்கிற்கு பத்திரிகை நண்பர்களை அழைத்து காரசாரமான பதிலை இவர்கள் மூலமாக நயனுக்கு அனுப்பியுள்ளார். அப்படி என்ன சொன்னார் என்று தெரியனுமா நயன் இப்படியே தொடர்ச்சியாக தன் கணவருடன் திரிந்தால் காணும் இடத்தில் அடிப்பேன் என்று சொன்னாராம்.இது போதாதா ஊதி ஊதி பெருசாக்க அவங்க அவங்க தங்களோட பங்க சிறப்பா இப்ப வரைக்கும்  செய்துட்டு தான் இருக்காங்க ( நம்மள மாதிரி ) இதை அறிந்த நயன் சும்மா விட்டாரா என்ன அடிதுடுவாவாமா அது வரைக்கும் என் கை என்ன மாங்காய பறிக்கும், அடித்தால் நானும் அடிப்பேன் என்று சவால் விட்டார்.இப்ப இருக்கவங்களுக்கெல்லாம் இருக்க எதிர்பார்ப்பு என்னன்னா  ரம்லத் நயன் அடிப்பாவா அப்படி அடிச்சா நயன் திரும்ப அடிப்பாவானு தான். இப்படி சண்டை இது வரை காலமும் Hollywood தான் இருந்திச்சு இப்ப டோலிவூட்லயுமா?

ரம்லத்துக்கு ஒரு செய்தி எதிர்வரும் 28 ஆம் திகதி பிரபுவு தேவாவும் நயனும் விஜய் TV க்கு சேந்தே போக போறாங்கலாம் முடிஞ்சா பிடிச்சுகொங்கோ............( ஏதோ நம்மளால முடிஞ்சது...நாராயணா நாராயணா )

4 comments:

 1. ஆஹா ஆஹா குடும்ப சண்டையை வெளிச்சத்துக்கு கொண்டுவாறாங்கள். பிரபுதேவாவின் மனைவியும் அவரை இழுத்துக்கொண்டு ஓடினவர் தான் நியூட்டனின் 3ஆம் விதி அவருக்கு இப்போ விளையாடுகிறது

  ReplyDelete
 2. ம்ம் .. படங்களிலேயே பல கதை சொல்லிட்டீங்க போலிருக்கே.. 28ஆம் திகதி கட்டாயம் விஜய் டிவி க்கு நல்ல விளம்பரம் தான்..

  ReplyDelete
 3. LOSHAN-ம்ம் .. படங்களிலேயே பல கதை.........

  ஆங்கிலத்தில் சொல்வார்களே வார்த்தைகளை விட படங்கள் பேசும் திறன் உடையவை என்று அதுக்கு ஒரு லிட்டில் டெஸ்டிங் பா..... தங்களின் வரவிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 4. வந்தியத்தேவன்-ஆஹா ஆஹா குடும்ப சண்டையை வெளிச்சத்துக்கு கொண்டுவாறாங்கள்.....

  அதான் நண்பரே இறுதியில் நாம் ( மன்னிக்கவும் நான் என்ற அகம் பாவம் இல்லாதவன் ) யார் என்று சொல்லி இருக்கோமே சிம்போலிக்கா நாராயணா நாராயணா....

  ReplyDelete