சரி நம்ம விசயத்திற்கு வரலாம் எம் குமரன் சன் ஒப் மகாலக்ஸ்மி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் கேரளத்து வரவு அசின்.தன் முதற்படத்திலேயே திறைமையான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென இடம் பிடித்தவர். தமிழில் உள்ள நடிகைகளில் நடிப்போடு நகைச்சுவையும் கலந்து கொடுக்கும் திறன் இவரிடம் காணப்பட்டதால் திரைப்பட வாய்ப்புக்களும் வந்து குவிய ஆரம்பித்தன. இவரின் வருகையில் நம்பர் 1 நடிகைகள் கூட தங்கள் இடம் பறி போய்விடுமோ என்றெண்ணிய காலமும் உண்டு. ( பின்னர் அது பறி போனது வேறு கதை) தொடர்ச்சியான் வெற்றி படங்களும் முகம் சுழிக்க வைக்காத கவர்ச்சியும் இவரை கொலிவூட்டின் ( கோடம்பாக்கம்) நம்பர் 1 நடிகையாக குறிகிய காலத்திலயே இடம் பிடிக்க செய்தது.
இத் தருணத்தில் தான் இவரின் நடிப்பிற்கு தீனி போடும் பட வாய்ப்பான கஜினி அமைந்த்திருந்தது. வெற்றி பட இயக்குனர் முருகதாஸ் மற்றும் குட்டி கமல் அவதாரம் சூர்யா ( கமல் தீவிர ரசிகர்களே இது ஓவர்னா மன்னிச்சுகோங்கப்பா) ஆகியோரோடு ஜோடி சேர்ந்த இவர் வெற்றியின் உச்சியை அடைந்தார் என்றால் மிகையாகாது.
ஆனால் இங்கு தான் தமிழ் ரசிகர்களுக்கு இருக்கு ஆப்பு என்பதை முன்கூட்டியே அறிந்திராத தமிழ் ரசிகர்களோ அசினின் நடிப்பில் தங்களையே மறந்திருந்தனர். ஆனால் இவருக்கோ அடித்தது ஜாக்பொட் இந்திய திரைப்படத்தில் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கவே அனைவரும் விரும்புவர் இவ்வாறன தருணத்தில் தான் இந்த கஜினி மூலம் ஹிந்தி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அசின். அதுவும் என்ன சும்மா உள்ள அல்லக்கைகளோட ( அல்லக்கைகளோடு நடிக்கவே அவரவர் எதல்லாமோ இழக்க தயாராக இருக்காங்களாம்) ஹிந்தி உலகின் நச்சத்திர நாயகன் அமீர் கானோடு அதுவும் தமிழில் ஹிட் கொடுத்த அதே கஜினி சொல்லவா வேண்டும் இனி.
வழமை போல் எல்லா நடிகைகளும் சொல்வது போல் தமிழை நான் என்றும் மறக்க மாட்டேன் என்று கூறியவாறு ஹிந்தி தேசம் நோக்கி பறந்தார் அசின் ( அவள் பறந்து போனாலே எண்ணெய் மறந்து போனாலே) இவ்வாறு சில ரசிகர்கள் தாங்கள் கட்டி வைத்திருந்த மனக்கோட்டையை எண்ணி அலைந்தது தான் மிச்சம். அதுக்குப்பிறகு அம்மணிய தமிழ் தேசம் காண்பதற்கே முடியாமல் போனது.
நடிகையாய் ஆகிவிட்டால் கிசு கிசு எல்லாம் ஏதோ நகமும் சதையும் போல் ஆகிவிடுகிறது.( சிலர் இதலாம் விஐபி களுக்கு சகஜமப்பானு திறியிறாங்க) ஆனால் அம்மணிக்கு நடந்ததோ வேறு ஒரு சமாச்சாரம், நடிகைகளை எந்தளவுக்கு நடிகர்கள் இம்சை படுத்துவார்களோ அதை விட இவர்களின் ரசிகர்கள். ஆனால் என்ன பண்ணுவது சில நேரங்களில் பொறுத்துதான் போக வேண்டியும் இருக்கிறது. இதே போல் தான் அம்மணி ஒரு நாள் படப்பிடிப்பில் தன் பங்கை முடித்துவிட்டு மேக்கப் அறைக்கு வந்து விட்டாராம் என்னவோ இங்கு பனி செய்பவர் மனதில் இவரை பற்றி எதுவும் புதிய மனக்கோட்டை எதுவும் இருக்குமாக்கும் உடனே தன் கைவேலையை காட்ட முயன்றிருக்கிறார் முடியாமல் போய் விட்டது போல.
ஆனால் இவ்வாறு நடிகைகளுக்கு நடப்பது இதுவே முதல் தடவையும் அல்ல அண்மையில் கூட ஹிந்தி நடிகை சில்பா செட்டியை பூசாரி முத்தமிட்ட கதையும் நினைவிருக்கலாம்,இப்படி பல கதை எல்லாம் எழுதினால் கண்டிப்பாக A சான்றிதல் தான்.
ஷில்பா ஷெட்டியை முத்தமிடும் பூசாரி
ஏதோ ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல செய்தி கிடைச்சிருக்குப்பா.............ஹா ஹா ஹா
இது உங்க 7 ஆவது பதிவா இல்ல 7 1/2 பதிவா .......(சும்மா சும்மா )
ReplyDeleteதொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...
ReplyDeleteஇது உங்க 7 ஆவது பதிவா இல்ல 7 1/2 பதிவா .......(சும்மா சும்மா )
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
வாழ்த்துகளுக்கு நன்றிகள்............ 7 1/2யை ,8 ஆக மாற்ற நேரம் வரும் போது கண்டிப்பாக மாற்றிவிடுகிறேன்.....ஹா ஹா ஹா