Monday, September 14, 2009

Compaq கோப்பை யாருக்கு??????

ஆடுகளமா இல்லை ஆடும் விதமா மாற்றப்பட வேண்டும் என்ற கேள்விக்கு ஆடுகளமே என்று தான் பலரது கருத்தும் இருக்கும் என்றால் அது மிகையான ஒன்றாக இருக்காது. ஏற்கனவே பிரேமதாச விளையாட்டரங்கில் இடம் பெற்ற போட்டிகளிலும் பெரும்பான்மையான நேரங்களில் முதலில் துடுப்பெடுத்தாடும் அணிகளே வெற்றி வாகை சூடியதை நாம் கண்டிருந்தோம்.



இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த 2 வது compaq கிண்ண போட்டியில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இறுதியாக நடை பெற்ற 11 போட்டிகளின் பின்னர் வெற்றியொன்றை பிரேமதாசாவில் பெற்று கொண்டவை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வெற்றி கூட இலகுவாக பெற்று கொண்ட ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.



இன்றைய போட்டி முறைமையில் மாற்றங்கள் (T20) ஏற்பட்டு வரும் நிலையில் இத்தகைய ஒரு ஆடுகளம் எந்தளவில் பார்வையாளர்களையும் பங்கு பெற்றும் அணிகளையும் விறுவிறுப்பை நோக்கி எடுத்து செல்லும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. குறிப்பாக இத்தகைய ஆடுகளத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெரும் அணி ஏறத்தாள போட்டியில் வெற்றி பெற்றதாகவே உணரப்படுகிறது.( இதை கடந்த கால போட்டிகளும் நிரூபித்திருகின்றன)

இது இவ்வாறு இருக்கின்ற தருணத்தில் தான் கடைசியாக இடம் பெற்ற 3வது போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதின இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியோ ஆடுகளத்தின் சாதகத்திட்கேட்ப முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்து போட்டியிலும் பாரிய வெற்றியை இந்திய அணிக்கெதிராக பெற்றுக்கொண்டது.( வழமை போல் இரும்பு மனிதர் சனத் தனது சதம் அடிக்கும் வாய்பை பரிதாபமாக பறிகொடுத்தார்) இருப்பினும் எனகென்னவோ அவரின் ஆட்டமிழப்பு துடுப்பாட்டாளரின் சாதகத்திற்கு கொடுத்திருக்க வேண்டுமோ என்றும் தோன்றியது காரணம் சனத்தின் காலில் பட்ட பந்து கிரிக்கெட் விதிமுறைக்கமைய விக்கெட்களுக்கு முன்னால் குத்தியதாக தென்படவில்லை.( எது எவ்வாறோ கொஞ்சம் தர்மசேனவுக்கு நடுவர் பயிற்சி தேவை என்பதை நன்கு உணர்த்தியுள்ளது)

சதத்தை தவற விட்ட சனத்




வெற்றி பெற்ற இலங்கை அணி

இவை எல்லாம் இவ்வாறு இருக்கின்ற தருணத்தில் தான் இன்றைய இறுதி போட்டி எந்தளவில் மீண்டுமொறுமுறை நாணய சுழற்சியில் தங்கி இருக்க போகிறது என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்றாகவே காணப்படுகிறது. நாணய சுழற்சியில் வெற்றி கண்ட இந்தியாவோ கரும்பு தின்ன கூலியா என்று துடுப்பெடுத்தாட ஆரம்பித்திருக்கிறது. தோனியின் முடிவு சரியே என்றிடத்தியம்பும் வகையில் லிட்டில் மாஸ்டர் சச்சின் தனது 44வது சதத்தினையும் பூர்த்தி
செய்தார். இது இவர் இலங்கைக்கு எதிராக பெற்ற 8வது சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே மைதானத்தில் இது 4வது சதமாக காணப்படுகிறது. இதில் இவர் 138 ஓட்டங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
சதம் அடித்த சச்சின்

நான் இதை பதிவு செய்யும் வரை இன்றைய போட்டி முதலில் துடுப்பெடுத்தாடும் அணிக்கு சாதகமான முறையில் 319 ஓட்டங்களை பெற்றுள்ளது . பார்க்கலாம் இன்று நமது சிங்கங்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று சரித்திர வெற்றியா இல்லை மீண்டுமொறுமுறை கங்குலியின் தலைமையில் இந்தியா இறுதி போட்டிகளில் தோற்றது போல் இலங்கையும் தோற்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்........இதன் பகுதி நிச்சயம் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை தொடர்ந்து பதிவு செய்யலாம் என எண்ணி உள்ளேன் பார்க்கலாம்...........

No comments:

Post a Comment