01.Tiger Woods
$110 million
இவரை அறியாதவர் அரிதாய் தான் இருப்பார்கள் அந்தளவுக்கு golf விளையாட்டில் தனெக்கென ஒரு இடம் பிடித்தவர்.இவர் இதுவரை போட்டி வெற்றிப்பணம் மற்றும் விளம்பரங்களில் தோன்றியதற்காக $ 900 மில்லியன்கலை சம்பாதித்திருக்கிறார்.இவருடை 13 வருட golf விளையாட்டு பிரவேசத்தில் ஒரு விளையாட்டு வீரனால் $ 1 பில்லியனை சம்பாத்திதவர் என்ற பெருமையை அடுத்த வருடம் எட்டிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
02.Kobe Bryant
$45 million
கூடைப்பந்தில் பிரபல்யமான இவர் தொடர்ச்சியாக நான்காவது தடைவயாகவும் NBA லாஸ் ஏஞ்சல்ஸ் லகேர்சில் இடம்பெற்ற போட்டியில் பட்டம் வென்றார். உலகின் பல பாகங்களிலும் இவரது ஜெர்சி (jersey) இலக்கமான 24 பொறித்த ஜெர்சியே விற்பனையாகி வருகிறது.குறிப்பாக அமெரிக்கா,சீனா,ஐரோப்பா ஆகிய இடங்களில். $ 21 மில்லியனை தனது வருமானமாக கொண்டுள்ள இவர் பிரபல்ய Nike, Upper Deck, Activision and VitaminWater.போன்ற நிறுவங்களின் உற்பத்திகளுக்கு விளம்பர பிரதிநிதியாக உள்ளார். 03.Michael Jordan
$45 million
MJ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் கூடைப்பந்து அறியாதவர்களுக்கும் பரீச்சாத்தியாமானவர். சுமார் 6 வருடங்களுக்கு முன்னரே தனது கூடைப்பந்து விளையாட்டுக்கு முற்றுபுள்ளிவைத்தாலும் இன்னும் அமெரிக்காவில் பிரபல்யமான நபராய் இருந்து கொண்டு தான் வருகிறார். இவரும் Nike இன் விளம்பர பிரதிநிதியாக செயற்பட்ட வேலை அதன் விற்பனையினை $ 1 பில்லியன் ஆக உயர்வடைய காரணமாய் இருந்தவர் என்று நம்பப்படுபவர். சார்லோட்டே போப்காட் அணியை வாங்கக்கூடிய சிலரில் ஒருவராய் இவரும் இருந்த போதிலும் இவர் இதில் ஒரு சிறியளவு பங்கினையே தன் வசம் வைத்திருக்கிறார். இருந்த போதும் இவ்வவணியின் நடவடிக்கைகளுக்கான தலைவராக இவரே செயற்படுகிறார்.
04.Kimi Raikkonen
$45 million
பார்முலா வன்னில் அதிகம் சம்பளம் பெரும் நபர். 2007 ம் ஆண்டு பட்டம் வென்ற இவர் கடந்த வருட போட்டியில் 3ம் இடத்தையே பிடிக்க முடிந்தது.இந்த வருடம் அதை விடவும் மோசமாக 10ம் இடட்டக்யே இவரால் கைப்பற்ற முடிந்தது. இதை தொடர்ந்து Ferrai இவரை தனது 1 வருட ஒப்பந்தத்தில் இருந்து விழக்கிகொண்டது.
05.David Beckham
$42 million
பெக்காம் உலகின் சிறந்த வீரர் என்ற பெருமையை இழந்தாலும்,புகழிலும் பிரபல்யத்திலும் உச்சியில் இருப்பதை அவரை இன்னமும் Adidas, Giorgio Armani , Motorola போன்ற நிறுவனகள் விளம்பரத்திற்கு பாவிப்பதை வைத்து அறிந்து கொள்ளலாம். இதற்காக இவர்கள் இவருக்கு மில்லியன் கணக்கில் வாரி வழங்குகிறார்கள். சிறிது காலம் AC Milan அணிக்காகவும் இவர் விளையாடியுள்ளார்.
06.LeBron James
$40 million
NBA மற்றும் MVP போட்டிகளின் சிறந்த போட்டியாளராக இவ்வாண்டு இவர் திகழ்கிறார்.இருந்தாலும் இவரது அணி சிறப்பான ஒரு முன்னேற்றத்தை அடையவில்லை.இருந்த போதும் இவருக்கான மிகப்பாரிய ஒப்பந்தத் சம்பளத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இருந்த போதும் இவர் இதை விட சிறந்த ஒரு ஒப்பந்தத்த தொகையினை எதிர்பார்ப்பதாக தெரிகிறது
07.Phil Mickelson
$40 million
உலகின் 2ம் நிலை கொல்ப் வீரர் இவர்.இவர் 5 வருட விளம்பர ஒப்பந்தமொன்ரை Callaway நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ளார்.இதனுடன் Barclay´s, Exxon, KPMG , Rolex ம் இவரை தமது வியாபர பொருளின் விளம்பர பிரதிநிதியாக நியமித்துள்ளனர். இவர் பணப்பரிசாக இதுவரை $ 54 மில்லியன்களை உழைத்துள்ளாராம்.டைகர் வூட்,விஜய் சிங்க்கிற்கு அடுத்ட படியாக இவர் தான் உள்ளாராம்.
08.Manny Pacquiao
$40 million
கடந்த வருட boxing உலகில் அனைவராலும் திரும்பி பார்க்கப்பட்ட ஒரு நபர்.இதற்கு காரணம் இரண்டு Boxing ஜாம்பவான்களான Oscar De La Hoya நை டிசம்பர் மாத சுற்றிலும் Ricky Hatton என்பவரை மார்ச் மாத சுற்றிலும் தோற்கடித்து பார்வையாளர் வருமானமாக $ 100 மில்லியன்களை அமெரிக்காவில் பெற்றவர்.Time magazine´s 100 செல்வாக்கு வாய்ந்தவர்கள் பட்டியலில் இவரும் இடம் பிடித்தாராம்.
09.Valentino Rossi
$35 million
எம்மில் பலர் இவரை நன்கறிந்திருப்பர் இரண்டு வருட தொடர் சரிவின் பின்னர் தொடர்ச்சியாக 8 தடைவைகள் உலக சாம்பியன் பட்டம் வென்றவர்.yamaha நிறுவனத்திற்காக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்குகொள்ளும் இவர் $ 16 மில்லியன்களை வருட வருமானமாக பெறுகிறார்.இதைவிட இரட்டை மடங்காக போனுசும் விளம்பரங்களிலும் உழைகிறாராம்.
10.Dale Earnhardt Jr.
$34 million
நச்காரின் அதிக பிரபல்யமான வாகன ஓட்டுனராக திகழும் இவர் கடந்த இரண்டு பருவங்களிலும் ஒரே ஒரு போட்டியில் தான் வெற்றி பெற்றுள்ளாராம்.இவரின் பொருற்கள் விற்பனையில் ஒரு சாரதியின் பங்கில் இரு மடங்கு இவருக்குரியதாம்.இவரின் மிகப்பெரிய விளம்பர நிறுவனங்களாக Adidas, Chevrolet, Polaris, Wrangler Nationwide Insurance ஆகியன இருக்கின்றனவாம் இவையெல்லாம் இந்த வருடம் இவருடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டவை.
11.Roger Federer
$33 million
இவரை அறியாமல் எவரும் இருப்பார்களோ தெரியவில்லை.டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரரான இவர் இதுவரை 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தன்வசப்படுத்தியுள்ளார்.இதுவரை இவர் பணப்பரிசாக $ 48 சம்பாத்திதுள்ளார்.
12.Shaquille O´Neal
$33 million
மீண்டுமொரு கூடைப்பந்து நச்சத்திரமான Shaquille O´Neal இந்த வருட அனைத்து நச்சத்திர வீரர்களுடனான போட்டியில் கலந்து கொண்டு MVP விருதினை தன் முன்னாள் அணி வீரர் Kobe Bryan உடன் பகிர்ந்து கொண்டார்.விளையாட்டிற்கு அப்பால் இவர் தனது Shaq , Dunkman சின்ன காலணிகளை விற்பனை செய்துவருகிறார்.1996 ம் ஆண்டு ஆரம்பித்த இந்த செயலில் இன்றுவரை இவரால் 75 மில்லியன் காலணிகளை விற்பனை செய்ய முடிந்த்துள்ளதாம்.இதை போல் இவரை Twitter ல் 1 . 2 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள் என்பதும் ஒரு சுவாரஸ்யமான செய்தி.
13.Oscar De La Hoya
$32 million
Manny Pacquiao உடனான போக்ஸ்சிங் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இவர் $ 30 மில்லியனை பெற்றுகொண்டராம்.அத்தோடு இவர் பார்வையாளர் வருமானமாக 14 .1 மில்லியன்களை பெற்றதோடு தனது ஓய்வையும் அறிவித்திருக்கிறார். இவரது PPV வருமானம் $ 696 மில்லியன்.
14.Lewis Hamilton
$32 million
டைகர் வூட்டுடன் அடிக்கடி ஒப்பிட்டு பேசுமளவு திறமை வாய்ந்த கறுப்பின வீரர் இவர்.தனது 23 வது வயதிலேயே பார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் அனைவராலும் கவரப்பட்டார்.இவர் இந்த போட்டியில் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்திலேயே வெற்றிவாகை சூடியதும் நினைவுகூரக்கூடியது. reebok உடன் கைகோர்த்துள்ள இவரை reebok தனது விற்பனை சின்ன பிறதி நிதியாக நியமித்துள்ளது.இதற்காக இவருடன் பல மில்லியன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
15.Alex Rodriguez
$32 million
இவரின் தற்போதைய வருமானம் என்னவோ விளையாட்டின் மூலம் பெறப்படாவிட்டாலும் இந்த வருமானத்திற்கு தனது 10 வருட விலயாடே காரணம் என்று தான் கூறுகிறார்.Yankees உடன் $ 275 மில்லியன் ஒப்பந்தம் 2007 ஆம் ஆண்டு பருவ கள்ளத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.கடந்த வருடம் இவரிற்கு வழங்கப்பட்ட $ 27 ஆனது இந்த வருட பருவ காலத்திற்கு $ 32 ஆக பெறுமதி மதிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் ஜனவரி மாதம் $ 1 மில்லியனை போனஸ் வருமானமாக பெற்றுள்ளார் $ 10 மில்லியன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவதற்காக.
// தகவலுக்கு நன்றிகள். copy செய்த Java Script Blog எங்கே paste செய்வது என்று சொல்ல முடியுமா? //
ReplyDeleteஉங்கள் வலைப்பூவில் உங்களுக்கு தேவையான இடத்தில் Paste செய்து கொள்ளலாம்.புதிய Gadget உருவாக்குங்கள் அதில் இந்த Java Scriptய் Pasteசெய்து விடுங்கள்.
mytamilpeople.blogspot.com