Sunday, September 27, 2009

பெண்மையை விற்ற பெண்..........!

பத்திரிகையில் படித்ததில் பதறிபோய் பார்த்த ஒரு சம்பவம்......!!!


கல்விக்காய் என்ன என்னோவெல்லாம் சிலர் இழந்திருப்பார்கள் ( காதலுக்காய் கல்வியை இழந்தவர்களும் இருக்கிறார்கள் ) ஆனால் ஒரு விசித்திரமான நபர் கல்விக்காய் தன் கன்னித்தன்மையை ஏலம் விட்ட சம்பவம் ஒன்று அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. மேற்கத்தேயவர்கள் என்ன சரி புதுமையாக செய்து கொண்டு தான் இருப்பார்கள் (இதுவாயா உங்க புதுமை என்றா முனு முனுக்கிறீர்கள்) அதற்காக இதுவுமா? 22 வயதை உடைய Natalie Dylan என்ற கலிபோனிய மாநிலத்தில் சான் தியாகாவில் வசிக்கும் மேற்படி பெண் தன் சகோதரி செய்ததை போன்று ( நல்ல குடும்பம்யா நல்ல விழங்கும்) தானும் தன் கன்னித்தன்மையை ஏலம் விட்டு அதன் மூலம் வரும் பணத்தை கொண்டு தன் மேற்படிப்பை தொடரவுள்ளாராம்.பெண்கள் தொடர்பான கற்கை நெறியில் பட்டம் பெற்ற இவர் ( என்ன கற்கை நெறியோ நல்லா படிக்குறாங்க போங்க ) மேற் கொண்டு குடும்ப மற்றும் திருமண சம்பந்தம்மான கற்கை நெறியின் உயர் பட்டத்தை பெறுவதற்காகவே இந்த முடிவை எடுத்தாராம்.



 Natalie Dylan


இவரின் இந்த முடிவிற்கு எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்ப்பு கிடைத்ததாம்.இவரின் இந்த ஏலத்தில் சுமார் 10000 செல்வந்தர்கள் போட்டியிட்டு இவருடன் ஒரு இரவினை உல்லாசமாக களிக்க போட்டிபோட்டுள்ளனர்.இவரில் ஒரு அதிஷ்டசாலி இவரின் கன்னித்தன்மைக்கு நிர்ணயித்த விலையோ அமெ.டாலர் 243,௦௦௦. ( இலங்கை பெறுமதி 27,459,000 எம்மாடியோ )


இவரின் சகோதரி தன் கற்கை நெறிக்காக தன்னை 3 வாரங்கள் விற்று தான் தன் பணத்தை செலுத்தினாரம். ஆனால் இவரோ ரொம்ப தெளிவு நீங்க எவளவு குடுத்தாலும் சரி அவருடன் ஒரு இரவு மாத்திரம் தான் இவர் செலவிடுவாரம் ( ஒரு இரவுக்கு போயா இவ்வளவு என்று கேக்காதிங்க)


இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த மேற்படி நபர் தான் இது சம்பந்தமாக கவலையடையவில்லை என்றும் தேவைப்படும் மருத்துவ சான்றிதழை பெற்றுகொடுக்க தயார் என்றும் கூறியிருக்கிறார்.
இச்செயலை தொடர்ந்து தற்பொழுது அங்குள்ள பெரும்பாலான மாணவிகள் இதையே தாங்களும் செய்ய எத்தனித்துள்ளனராம். நல்ல முன்மாதிறாய் இருந்த அம்மா Natalie Dylan அவர்களே உங்களுக்கு ஒரு கோயிலே கட்டலாம் போல.......
       இப்ப புறிஞ்சிருக்குமே ஏன் நாம இப்படியே இருக்கம்னு. நீங்களும் ஏலம் கேக்கலாம்          வேணும்னா சொல்லுங்கப்பா.........

No comments:

Post a Comment