
ஆனாலும் நம்மவர்கள் இதில் கூட சாதனையை செய்யவும் தவறவில்லை, அவ்வாறான ஒரு சாதனை முயற்சியை தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள உணவு விடுதி ஒன்று வித்தியாசமான முறையில் சாதனையை செய்ய எண்ணி அதை முடித்தும் காட்டி உள்ளனர். அப்படி என்ன தான்யா அதுன்னு தோனுதிள்ள அப்படி சிறிசா ஒன்னும் இல்ல ரொம்ப பெருசா ( நீங்களே பாத்துட்டு சொல்லுவிங்க ) நம்மலாம் சாதரணமா ஒரு தோசை எந்தளவுக்கு இருக்கும்னு பார்த்திருப்பம் சொல்ல போனா நம்மளோட சாப்பாட்டு தட்டோட அளவு இல்ல அத விட கொஞ்சம் பெருசா கூட இருக்கும் ஆனா இவன்களோ தயார் செய்திருக்க இந்த தோசயோட அளவு என்ன தெரியுமா?

32அடி 5அங்குலம் ஆனால் இது தான் இவர்களின் முதல் முயற்சி என்று நினைக்காதிங்க இவங்க இதுக்கு முதலும் இப்படி இரண்டு பிரமாண்டமான தோசையை தயார் செய்து அதற்குரிய சாதனைய தான் இப்பொழுது முறியடிச்சு இருக்காங்க. இவங்க முதல் முதலா தயார் செய்த தோசயோட அளவு 25அடியாம். இதை இவர்கள் 1997 ஆண்டு மார்ச் மாதம் செய்திருந்தார்களாம். இதை தொடர்ந்து 2006ஆம் ஆண்டு இவர்கள் தயார் செய்த தோசையின் அளவு 30அடி 5 அங்குலமாகும்.

இவர்கள் வசமிருந்த இந்த தோசை சாதனையை இவர்களே முறியடிக்க எடுத்த முயற்சி தான் கடந்து சென்ற ஆகஸ்ட் மாதம் 19திகதி அரங்கேறியுள்ளது. இந்த தோசையை செய்து முடிக்க அவர்களுக்கு எடுத்து கொண்ட மணியோ வெறும் 40 நிமிடங்களுக்கும் குறைவாம். இதற்கான பணியில் 16 சமயல்லாளர்களும் 8உதவியாளர்களும் கடந்த 10நாட்களாக பயிற்சியில் ஈடு பட்டார்களாம் இதன் சரியான தன்மையினை கொண்டுவர. கடைசியில் இவர்களின் இந்த முயற்சி வெற்றியளித்து வெற்றிக்களிப்பில் இருக்கிறார்கள் இதை உருவாக்கியவர்கள்.

இந்த தோசைக்கு இவர்கள் பெயர் வைக்கவும் தவறவில்லை இந்தியாவின் முதல் cow boy திரைப்படமாக வெளிவர விருக்கும் quick gun murugan என்ற பெயரையே இந்த தோசைக்கும் வைத்திருக்கிறார்கள். சபாஸ் எப்படியெல்லாம் விளம்பரம்பா.............

இதைத்தான் ஒரு கல்லுல 2மாங்கான்னு சொல்லுவங்களோ...............?
No comments:
Post a Comment