Tuesday, September 15, 2009

Compaq கிண்ணம் யாருக்கு ??????? பாகம் 2

போட்டி ஆரம்பிக்க முன்னரே முடிவை அறிந்து வைத்திருந்த பார்வையாளர்கள்

ஏதோ கடவுள் புண்ணியத்தில் சொன்னது போல் 2ஆம் பக்கத்தை எழுத முடிகிறது. ஏற்கனவே நான் எனது நேற்றைய 1ஆம் பதிவில் கூறியது போல் compaq கிண்ணத்தை முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சொந்தமாக்கி கொண்டது. இருப்பினும் இதில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் வெற்றியை நோக்கி பயணிப்பதாக இருந்த போதும் அடித்தாட வேண்டும் என்ற மனோபாவம் நிலைத்தாட வேண்டும் என்பதை விட மேலோங்கி காணப்பட்டதால் அதனால் வெற்றிகரமாக நோக்கத்தை நிறைவு செய்து கொள்ளமுடியாமல் போனது.

இருப்பினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டில்ஷான் மற்றும் சனத் ஜோடி தமக்கே உரியே தன்னிகர் பாணியில் அடித்தாடியதை கண்ட இந்தியா அணியும் அதன் தலைவர் தோனியும் சற்றுநேரம் செய்வதறியாமல் திளைத்தது காணக்கூடியதாக இருந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டில்ஷான் அடித்தாடிய போது

இவர்களின் வேகமான துடுப்பாட்டத்தினால் சுழற்பந்து வீச்சாளர் பஜ்ஜியை கூட குறிப்பிட்ட நேரத்தின் முன்னரே களத்தில் தன் பணியை செய்ய இலங்கை அணி உத்தியோக பூர்வ அழைப்பினை துடுப்பின் மூலம் அனுப்பி இருந்தது.சவாலை சமாளிப்பதற்காக களம் இறங்கிய பஜ்ஜியையும் ஒரு கை பாத்து விட எண்ணிய டில்சான் அவரின் பந்தை கூட எல்லை கோட்டை பார்த்து விட்டு வரும் படி சொன்னது, இன்று எங்களுக்கு இந்த கிண்ணம் வேண்டும் என்பதையே உணர்த்தியது.இருப்பினும் தன் தலைவனின் நம்பிக்கையை காப்பற்ற வேண்டும் என்றெண்ணிய பஜ்ஜி இலங்கை அணியின் முதலாவது விக்கெட்டான டில்சானின் விக்கெட்டை பதம் பார்த்தது இலங்கை அணியின் பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தையும் இந்திய அணிக்கு ஒரு புதிய உத்வேகத்தையும் கொடுத்திருந்தது.
டில்ஷானின் விக்கெட்டை வீழ்த்திய பஜ்ஜி தன் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் விதம்


எது எவ்வாறாகினும் தன் துடுப்பாட்ட பாணியை மாற்றி கொள்ள விரும்பாத இரும்பு மனிதர் சனத் தனது விளாசலை தொடர்ந்தும் தன் அணிக்காக செய்துகொண்டே இருந்தார். ஆனால் இதை புறிந்து கொள்ளாத முன்னால் அணித்தலைவர் மகேள பஜ்ஜிக்கே தனது விக்கெட்டையும் பறி கொடுத்தது மீண்டும் ஒரு முறை சோகத்தில் ஆழ்த்தியது. இருந்த போதிலும் களத்தில் சனத் இருந்தால் கண்டிப்பாக இந்த இலக்கை அடைய முடியும் என்று மனம் சொல்லி கொண்டே தான் இருந்தது.
எதிரணியை துவம்சம் செய்யும் எண்ணத்தில் அடித்தாடும் சனத்



சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இலங்கை அணி பெறுகின்ற ஓட்ட எண்ணிக்கை ஒப்பிட்டளவில் குறைவடைய இது தான் சந்தர்பம் ஏதோ ஒரு வகையில் இலங்கையை கட்டுப்படுத்த என எண்ணிய தோனி தொடர்ந்தும் சுழற்பந்து வீச்சு பாணியை கொண்ட பந்து வீச்சாளர்கலையே ஈடுபடுத்த தொடங்கினர். அதற்கு பிறதி பலனாக சனத்தும் தனது விக்கெட்டை யுஸுப் பதானுக்கு பறி கொடுக்க நேர்ந்தது. ஓவருக்கான ஓட்ட சராசரி இந்திய அணியை விட மேலோங்கியே காணப்பட அதை அவ்வாறே பேணிக்கொள்ள எண்ணிய இலங்கை அணி துஸாரவை அடித்தாட களம் இறக்கியது. அவரும் பணியை ஏதோ ஒரு வகையில் செய்து விட்டு வந்த வேகத்தில்
பவிலியன் திரும்பினார். .4 விக்கட்டுக்களை இலங்கை அணி பறி கொடுத்து இருந்தாலும் அது ஓட்ட விகிதத்தில் இந்திய அணியை முந்தியே காணப்பட்டதோடு பெற வேண்டிய ஓட்ட எண்ணிக்கையும் ஓவருக்கு 6 ஆகவே காணப்பட்டது.
சனத்தின் விக்கெட்டை கைப்பற்றிய யுஸுப் பதான் குதூகலத்தில்
இனிமேலும் அடித்தாட வேண்டிய தேவை இல்லை ஒவ்வொரு பந்திற்கும் ஒவ்வொரு ஓட்டம் எடுக்க எண்ணி ஆட்டத்தை சங்கா மற்றும் கண்டம்பி ஜோடி ஆடியது. ஓரளவிற்கு நோக்கம் நிறைவேறும் என்று என்னும் தருணத்தில் சங்காவின் விக்கெட் துரதிஷ்ட வசமான முறையில் ( துடுப்பு சங்கவின் கையில் இருந்து நழுவி விக்கெட் மேல் விழுந்தது) விழுந்தது.
துடுப்பு கை நழுவி விக்கெட்டின் மேல் விழுந்த போது


இனிமேலும்
வெற்றி என்பது சாத்தியமா என்று எண்ணிய தருணம் கண்டம்பியோடு ஜோடி சேர்ந்த கப்புகெதெர சிறப்பான இணைப்பாட்டத்தின்moolam மூலம் மீம்ண்டும் இந்தியா அணிக்கு நெருக்கடி கொடுத்த வண்ணமே இருந்தனர். ஓரளவுக்கு போட்டியின் இறுதிக்கட்டம் நெருங்கிக்கொண்டிருக்கும் வேலையில் பஜ்ஜி மீண்டும் ஒரு முக்கிய விக்கெட்டை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இனி எவராலும் இலங்கை அணியை காப்பாற்ற முடியாது என்பது எங்களுக்கு தெரிந்திருந்த வேலையிலேயே தொடர்ச்சியான விக்கெட் வீழ்ச்சியில் இலங்கை தோல்வியினை தழுவியது.
கண்டம்பி கப்புகெதர ஜோடி
கப்புகெதெர ஆட்டமிழந்த போது

இருப்பினும் இத்தகைய ஒரு ஆடுகளத்தில் இலங்கை அணியினரால் 273 ஓட்டங்களை இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி பெற முடிந்தமை பாராட்டப்பட வேண்டிய ஒன்றே....... வெற்றி பெற்ற இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் நேற்றைய தினம் தனது .59 வது போட்டி நாயகன் விருதினையும் .14 தொடர் நாயகன் விருதுனையும் தன் வசப்படுத்தினார்.
ஆட்ட /தொடர் ஆட்ட நாயகன் சச்சின்
இந்திய அணி 1999 ஆண்டுக்கு பின்னர் இடம் பெற்ற 22 இறுதி போட்டிகளில் பங்கேற்று அதில் வெறும் .2 போட்டிகளை மாத்திரம் வெற்றி பெற்று .17 தோல்வியை சந்தித்திருந்தமையும் இங்கு குறிப்பிட பட வேண்டிய ஒரு விடயமாகும். இலங்கை அணியோ கடைசியாக இடம் பெற்ற .2009 ஆண்டு உலக கிண்ணம் மற்றும் .T20 இறுதிப்போட்டி இந்தியாவுடனான Idea கோப்பை போல் இன்று இந்த .Compaq. கோப்பையிலும் தனது இறுதிப்போட்டி தோல்வியை தொடர்ந்தது.
கிண்ணத்துடன் தோனி

வெற்றிக்களிப்பில் இந்தியா அணி




பார்க்கலாம் சிங்கங்கள் தென்னாபிரிக்காவில் இடம் பெறவிருக்கும் போட்டிகளில் எவ்வாறு தங்கள் பிழைகளை திருத்தி கொள்கிறார்கள் என்று............

No comments:

Post a Comment