Saturday, September 26, 2009

கண்ணியவாங்களின் விளையாட்டா கிரிக்கெட்...???

Icc Champions trophy நேற்றைய தின இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் பதிவிடக்கூடிய வகையில் ஒரு சம்பவம் அறங்கேறியது. இதில் யார் வென்றார் யார் தோற்றார் என்பதை கண்டிப்பாக பார்க்கப்போவதில்லை.( அதான்யா நம்ம பசங்க மண் கவ்விடாங்கள்ள அத வேற எழுதி வேற தொலைக்கணுமா) போட்டியில் வெற்றி தோல்வி தவிர்க்க முடியாத ஒன்று. அன்றைய தினம் சிறப்பாக செயல்படும் அணி வெற்றியை காணலாம். இது யான் மட்டுமில்லை யாவரும் அறிந்த உண்மை.

ஆனால் அதை விட ஒரு சிறப்பான விடயம் எவ்வாறு மைதானத்தில் நடக்க வேண்டும் சக போட்டியாளரை எவ்வாறு மதித்தல் என்பது எந்த விளையாட்டாக இருந்தாலும் ஒவ்வொரு வீரரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்றே. இந்தவகையில் இலங்கை கிரிக்கெட் அணி இவ்வாறன செயற்பாடுகளில் எப்பொழுதும் முன்னணியிலேயே இருந்திருக்கின்றது என்பது கடந்த கால பதிவுகளும் பாராட்டுகளும் பறை சாற்றுகின்றன. இருந்தாலும் இந்நிலை பறி போய் விடுமோ என்ற ஒரு எண்ணம் மனதில் உதிக்க ஆரம்பித்திருக்கிறது, காரணம் இலங்கை அணித்தலைவர் குமார் சங்ககார மைதானத்தில் நடந்து கொள்ளும் விதம். அணித்தலைவராய் பொறுப்பேற்க  முன்னர் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு முன்னோடியாய் திகழ்ந்தவர் இன்றோ அதற்கு எதிர்மாறான செயற்பாடுகளை செய்வது ஏற்றுகொள்ளகூடியதாய் இல்லை. இதை இவருக்கு எவர் எடுத்து சொல்வார்களோ தெரியவில்லை.( கண்டிப்பாக நான் இல்லை காரணம் நான் அந்தளவு நல்லவன் இல்லை, அதனால் இந்த பணி நல்லவர்களுக்கு வழங்கப்படுகிறது)


இவர் தான் அந்த அவர் 


ஆனால் கண்ணிய வான்களின் விளையாட்டு என்று சொல்லப்பட்டு வரும் கிரிக்கெட்டில் அதை நிரூபித்து காட்ட சந்தர்ப்பம் ஒன்று இங்கிலாந்து அணித்தலைவருக்கு கிடைத்திருந்தது. நேற்றைய போட்டியில் இலங்கை அணி தொடர்ச்சியான சரிவுகளை சந்தித்து கொண்டிருந்த போது சரிவில் இருந்து சற்று தூக்கி கொண்டு வந்தவர் மத்தியூஸ். எப்படியாவது ஒரு கௌரவமான எண்ணிகையை பெற்று கொடுக்க துடித்தவர் ஒரு தருணத்தில் 2 ஓட்டங்கள் பெரும் வாய்ப்பொன்றை  பெற்றார் முதல் ஓட்டம் பூர்த்தியானதும் இரண்டாவது ஓட்டத்திற்கு தயாரான போது எதிர் பாரா விதமாக பந்து வீச்சாலரோடு மோதிக்கொளும் நிலை உண்டானது இதனால் இவரால் 2 ஓட்டத்தை பூர்த்தி செய்ய முடியாமல் போக விக்கெட் காப்பாளர் ஆட்டமிழக்க செய்வதற்கான் முயற்சியில் ஈடு பட்டிருந்தார். அவரின் முயற்சிக்கு பலனாக மத்தியுசூம் ஆட்டமிலந்ததாகவே ஆரம்பத்தில் அறிவிக்கபட்டது. ஆனால் முடிவில் திருப்தி அடையாத மத்தியூஸ் நடுவர்களிடம் முறையிட்ட போதும் அது அப்பொழுது பயனளிக்க வில்லை. கடுப்பான மத்தியூஸ் பவிலியன் திரும்ப முன்னரே டாய் தம்பி இங்க வா உனக்கு இன்னொரு சான்ஸ் தந்தா சூப்பரா விளையாடுவியா? உடனே மத்தியுசூம் கண்டிபாங்க, சரி போனா போகுது பொழச்சு போ என்று இங்கிலாந்து அணித்தலைவர் straus  வாய்ப்பை வழங்கினார். இந்த நிகழ்வே கிரிக்கெட் கண்ணிய வான்களின் விளையாட்டு என்பதை இன்னொரு முறை நிரூபித்திருக்கும்.( அதற்க்கு பிறகு மத்தியூஸ் வந்த வாய்ப்பை சொதப்பியது வேற கதை)2 வது ஓட்டம் பெற முட்ட போது மோதிகொள்கின்றனர்
நடுவரிடம் முறையிடும் மத்தியூஸ் 

இதே போன்ற ஒரு நிகழ்வு இலங்கையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக இடம் பெற்ற போது
(ஆண்டு, காலம், கோப்பை எல்லாம் மறந்து போச்சு) அதிரடி நாயகன் சைமண்ட்ஸ் (இவரும் மைதானத்தில் அந்த மாதிரி respect கொடுப்பவர் அட உண்மையாங்க) LBW முறையில் ஆட்டமிழந்ததாக peter manul ( அப்பா இதாவது நினைவில இருக்கே) அறிவித்தார் இருந்தாலும் இதை தவறென்பதை சுதாகரித்து கொண்ட அவர் இது சம்பந்தமாக அப்போதைய இலங்கை அணித்தலைவர் அத்தபத்துவிடம் சொன்ன போது அவரை அழைத்து விளையாட சொன்னார்.இதுவும் அன்றைய தினம் எல்லாராலும் பாராட்டப்பட்ட ஒரு நிகழ்வு,.


ஏய் தம்பி இங்க வாப்பா...!

இப்படிப்பட்ட ஒரு அணி இவ்வாறான பெயரை பெற எத்தனை காலம் உழைத்திருக்கும் அதை ஒரு சொற்ப நொடியில் இழந்து விட எவறும் அனுமதிக்கவே கூடாது. இலங்கை கிரிக்கெட்டே விழித்துகொள்.


நான் தப்பு செஞ்சா மன்னிச்சு கொங்கப்பா 
 

No comments:

Post a Comment