Thursday, September 10, 2009

தாரே சமீன் பார் பார்க்க வேண்டிய படம்.....

Tare zameen par....... இந்த பெயரை எத்தனை தடவை உச்சரித்தாலும் எனக்குள் ஓடுவது அதில் நடித்த அந்த பையன் தான் தன் தோற்றத்திற்கும் வயதிற்கும் அப்பாற்பட்ட ஒரு நடிப்பு. 2007ம் ஆண்டுப்பகுதியில் வெளியான இத்திரைப்படம் சிறியோர் முதல் பெரியோர் மனதை வென்றது என்றால் மிகைஆகாது. விசேட கவனம் தேவைப்படும் ஒரு சிறிய பையனின் கதை மிகவும் சிறப்பாக கதையம்சம் மற்றும் இசையில் கவனம் செலுத்தி இருந்தது வெகுவாக கவர்ந்தது. முதற்தடவை இத்திரைப்படத்தை என் நண்பியொருவர் தான் பார்க்கும் படி பரிந்துரை செய்தார் பார்த்தபின் தான் உணர்ந்தேன் வாழ்க்கையில் தவற விடக்கூடாத ஒரு திரைப்படம் அது. இதுவரை சுமார் 5 தடவைகளுக்கு மேல் இந்த திரை படத்தை முதற்தடவை பார்த்த அதே ஆர்வத்துடன் பார்த்தேன்.

அதே போல் அதில் இடம் பெற்ற பாடல் வரி அதனை இசையமைத்த விதம் மிகவும் அற்புதமாக மனதை தொடும் விதமாக இருந்தது. படம் ஆரம்பித்த முதல் இறுதிவரை ஒரு படம் பார்கிறேன் என்ற ஒரு எண்ணமே இல்லாமல் தன்னை ரசிக்கும் படி வைத்த அந்த பையனுக்கு ஒரு 5*

அண்மையில் நடந்தேறிய இந்திய தேசிய விருது வழங்கும் விழாவில் கூட இந்த திரைப்படத்தின் பாடலுக்கு விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
முடிந்தால் நீங்களும் இந்த படத்தை பாருங்கள் வாழ்கையில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி கண்டிப்பாக கிடைக்கும்.

1 comment: